சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனை

சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார்…

srm

சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையின் புறநகர் பகுதியான பொத்தேரி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பகுதியாகும். இங்குதான் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இங்கு பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் புகழ் பெற்ற கல்லூரியான எஸ்ஆர்எம் கல்தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்ள் படிக்கிறார்கள். மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹாஸ்டல் விடுதிகளில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக ரகசிய தகவலகள் வந்தது. இதையடுத்து அதிகாலையிலேயே திடீரென எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆண்கள், பெண்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் அவர்களின் இருசக்கர வாகனங்களில் தீவிரமாக சோதனை நடந்தது.

மேலும் வெளி நபர்கள் உள்ளே செல்லும் போது அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக சோதனை நடந்தது. கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தவலை உறுதிப்படுத்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.