பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் குவித்த இந்திய வீராங்கனைகள்.. குவியும் வாழ்த்து..!

Athletics Paralympics: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில்  17வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள 4000க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்…

para olympic1

Athletics Paralympics: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில்  17வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள 4000க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய சார்பில் 84 பேர் கலந்து கொண்ட நிலையில் நேற்று நடைபெற்ற பத்து மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா என்பவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் என்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இவர் தொடர்ந்து இரண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.’

para olympic

பாரா ஒலிம்பிக் போட்டிகள் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனைகள் வரலாறு படைத்துள்ளார்கள் என்றும் அவர்களது அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று பெண்களுக்கான தடகளம் 100 மீட்டர் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டி மாலை 4 45 மணிக்கு நடைபெற உள்ளது. அதேபோல் கலப்பு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இந்திய வீரர் தேவராட்டி ராமகிருஷ்ணா கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் இன்று பேட்மிண்டன் போட்டிகள், சைக்கிள் போட்டிகள், வில்வித்தை போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.