கிராமப்புற மக்களின் பேவரைட் பைக் எது தெரியுமா? விற்பனையில் பல்சரை பின்னுக்குத் தள்ளிய சூப்பர் பைக்..

வளர்ந்து வரும் இளைஞர்களிடம் இந்த இரண்டு மோகங்கள் மட்டும் எப்போதுமே குறைவதில்லை. ஒன்று காஸ்ட்லி மொபைல் போன். மற்றொன்று பைக். தற்போது ரூ. 20,000 மதிப்பில் அனைத்து வசதிகளும் கூடிய மேம்படுத்தப்பட்ட மொபைல் போன்கள்…

Bike

வளர்ந்து வரும் இளைஞர்களிடம் இந்த இரண்டு மோகங்கள் மட்டும் எப்போதுமே குறைவதில்லை. ஒன்று காஸ்ட்லி மொபைல் போன். மற்றொன்று பைக். தற்போது ரூ. 20,000 மதிப்பில் அனைத்து வசதிகளும் கூடிய மேம்படுத்தப்பட்ட மொபைல் போன்கள் கிடைக்கின்றன. எனவே இளைஞர்கள் யோசிக்காமல் நல்ல மொபைல் போன்களை வாங்குகின்றனர். ஆனால் மற்றொன்றான பைக் என்பது பலரின் கனவாக உள்ளது. நாமும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் எடுத்து ஊருக்குள் கெத்தாக வலம் வர வேண்டும் என்பது பொல்லாதவன் படத்தில் வரும் தனுஷ் போல் இளைஞர்களின் கனவாக இருக்கிறது.

அந்த வகையில் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பது பல்சர் தான். பல்சர் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் அதன் மோகம் குறையவில்லை. ஆனால் தற்போது பெட்ரோலின் விலை, மைலேஜ், குறைவான பராமரிப்பு போன்ற காரணங்களால் பல்சர் பக்கம் போக சற்று யோசிக்கின்றனர். எனினும் இருசக்கர வாகன விற்பனையில் இந்தியாவில் பல ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது ஹீரோ ஸ்பலண்டர்.

ஸ்மார்ட் லுக், அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்குவதால் 2024-ம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் ஸ்பெலன்டர் விற்பனையே முதலிடத்தில் இருக்கிறது. இதனையடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த பஜாஜ் பல்சர் தற்போது ஓரிடம் கீழே இறங்கி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை பெற்ற வாகனம் தான் ஹோண்டா சைன். ஸ்பெலண்டர் போலவே லுக், மைலேஜ், குறைவான பராமரிப்பு ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் ஹோண்டா சைன் விற்பனையில் முன்னிலை பெற்று வருகிறது.

மீடியாவை விட மருத்துவத் துறையில… கொளுத்திப் போட்ட சின்மயி.. வைரலாகும் ஆடியோ..

கடந்த ஜனவரி முதல் ஜுலை வரை ஹோண்டா சைன் பைக்குகள் சுமார் 10,47,217 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் விற்பனையில் சுமார் 113% உயர்ந்து இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது ஹோண்டா சைன். பெரும்பாலும் ஸ்பெலண்டர் பைக் கிராமப்புற மக்கள் வாங்கும் வேளையில் தற்போது ஹோண்டா சைன் பைக்கும் அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது. இனி அடுத்தடுத்து பண்டிகைக் காலங்கள் வரவிருப்பதால் மேலும் இவற்றின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.