பச்சைப்புள்ள… பால்வாடின்னு நினைச்சீங்களா… விஜய் செஞ்சது பக்கா பிளான்

By Sankar Velu

Published:

விஜய் இன்று காலை கட்சிக்கொடியையும், கொள்கைப் பாடலையும் அறிமுகப்படுத்தினார். இது அனைத்துக்கட்சியினரையும், ரசிகர்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்து விட்டது. அடுத்து எப்போ மாநாடு, விஜய் என்ன பேசுவார் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிப் பெயரை டுவிட்டர் தளத்தில் விஜய் அறிவித்தார். அவரது அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளை அனைவரும் கவனித்து வருகின்றனர். இவர் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. இன்று கட்சிக்கொடியும், கொள்கைப் பாடலும் அறிமுகமாகி உள்ளன.

vijay 2
vijay 2

இதற்கான விளக்கத்தை மாநாட்டில் தருகிறேன் என விஜய் சொல்லி விட்டார். இன்று 22ம் தேதி அவரது சென்டிமென்ட் நம்பர். அவரது பிறந்த நாள் ஜூன் 22. இன்னொன்னு அவரது வாகனத்தில் நம்பர் அப்படித்தான் வரும். இன்னொரு முக்கியமான விஷயம் இன்று சென்னை கொண்டாட்டம்.

சென்னை என்ற மாநகரம் உருவாகிய நாள். இன்னொரு மிக முக்கியமான விஷயம் இதே ஆகஸ்டு 22ம் தேதி தான் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படம் வெளியான நாள்.

அப்போது 18 லட்சத்துல இந்தப் படத்தை எம்ஜிஆர் எடுத்தார். அது ரிஸ்க். தேவையில்லாத வேலைன்னு விமர்சனம் வந்தது. அப்போது எம்ஜிஆர் சொன்னது இதுதான். இந்தப் படம் வெற்றி அடைஞ்சா நான் மன்னன். இல்லேன்னா நாடோடின்னாரு. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

vijay kodi
vijay kodi

இந்த வெற்றியை திமுக பயன்படுத்திக் கொண்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் அண்ணாத்துரை தலைமையில் நடந்த மாநாட்டில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அப்போது தான் அண்ணா எம்ஜிஆருக்கு தங்கத்தில் போர் வாள் கொடுத்தார். அதை பிற்காலத்தில் தாய் மூகாம்பிகை கோவிலுக்கு எம்ஜிஆர் கொடுத்து விட்டார்.

சிகப்பு, மஞ்சள், சிகப்பு 2 போர் யானைகள் நிக்குது. இந்தக் கொடிக்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்கிறேன்னு விஜய் சொல்லி விட்டார். கொடியின் நடுவில் உள்ள பூ வந்து வாகைப்பூ. சூரன் மாறன் என்ற பேரரசன் போர்க்களத்துக்குப் போகும் போது இந்த வாகைப்பூவை சூடிக் கொண்டு தான் போவான். இதன் மூலம் 14 தடவை வெற்றி பெற்றுள்ளான்.

திருப்பூரில் இப்போதே 10 லட்சம் கறைவேட்டிகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்களாம். விஜயகாந்தையும், எம்ஜிஆரையும் ரோல் மாடலாக வைத்து விஜய் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார்.

தன்மேல் உள்ள நம்பிக்கை, மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் தான் விஜயை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரவைத்துள்ளது. 200 கோடியை வாங்கும் அவர் அதை எல்லாம் நிறுத்தி விட்டு அரசியலுக்கு வந்து இருப்பது உண்மையிலேயே அவரது தன்னம்பிக்கையைத் தான் காட்டுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.