ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முன்பு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னை நகரம் நிறுவப்பட்டதை இந்நாள் நினைவுபடுத்துகிறது. இந்த நாள் சென்னையின் வளமான வரலாறு, சிறப்பான கலாச்சாரம் மற்றும் அதன் ஆரம்ப நாட்களில் ஒரு சிறிய நகரமாக இருந்து ஒரு பரபரப்பான பெருநகர மையமாக மாற்றப்பட்டதை பிரதிபலிக்கிறது.
இந்த மெட்ராஸ் தினம் இந்தியாவின் கலாச்சாரம் நிறைந்த நகரங்களில் ஒன்றின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை நினைவுபடுத்துகிறது. மெட்ராஸ் தினத்தின் தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன என்பதை இனிக் காண்போம்.
மெட்ராஸ் தினம் 2024 தேதி
2024 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 22 ஆம் தேதி வியாழன் அன்று மெட்ராஸ் தினம் அனுசரிக்கப்படும். இந்நாளில் நகரத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. விழாக்களில் கண்காட்சிகள், விரிவுரைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும், அவை சென்னையின் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
மெட்ராஸ் தினம் 2024 வரலாறு
சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்களான வின்சென்ட் டிசோசா, மயிலாப்பூர் டைம்ஸ் மற்றும் பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் இயக்குநரும் ஆசிரியருமான சஷி நாயர் ஆகியோரால் மெட்ராஸ் தினம் என்ற யோசனை முதலில் தொடங்கியது. அவர்கள் இருவரும் 2004 இல் வரலாற்றாசிரியர் எஸ். முத்தையாவின் வீட்டில் நடந்த உரையாடலின் போது மெட்ராஸ் தினம் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மெட்ராஸ் உருவான நாள் ஆனது 1639 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் ஆரம்பமானது. வரலாற்றின்படி, கிழக்கிந்திய நிறுவனம் உள்ளூர் ஆட்சியாளரான விஜயநகரப் பேரரசரிடமிருந்து ஒரு சிறிய நிலத்தை வாங்கியது. மற்றும் அங்கு ஒரு வர்த்தக நிலையத்தை நிறுவியது. முதலில் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி பின்னர் மெட்ராஸ் நகரமாக வளர்ந்தது. இந்த நகரம் முறையாக ஆகஸ்ட் 22, 1639 இல் நிறுவப்பட்டது. மெட்ராஸ் நகரம் ஜூலை 17, 1996 அன்று தமிழ்நாடு மாநில அரசால் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெட்ராஸ் தினத்தின் முக்கியத்துவம்
சென்னையின் செழுமையான பாரம்பரியம் மற்றும் வரலாற்று பரிணாமத்தை கொண்டாட இந்த நாள் சிறப்பானதாகும். இது நகரத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தில் அதன் தாக்கத்தையும் நினைவூட்டுகிறது. இந்த நகரின் வரலாறு மற்றும் கலாச்சார வேர்களுடன் மீண்டும் இணைவதற்கு குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம், சென்னையின் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மெட்ராஸ் தினம் உதவுகிறது.
வந்தாரை வாழவைக்கும் சென்னையின் மற்றொரு ஆண்டைக் குறிக்கும் நிலையில், மெட்ராஸ் தினம் 2024 நகரத்தின் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் அதன் எதிர்காலத்திற்கு பங்களிக்கவும் அனைவரையும் அறிவுறுத்துகிறது. வரலாற்று ஆய்வு, கலாச்சார ஈடுபாடு அல்லது சமையல் போட்டிகள் ஆகியவற்றின் மூலம், இந்த குறிப்பிடத்தக்க நகரத்தின் பாரம்பரியத்தை கொண்டாடலாம்.