அசுரன் படத்துல இந்த டயலாக்கை மாரி செல்வராஜ் தான் எழுதி கொடுத்தார்… இயக்குனர் வெற்றிமாறன் பகிர்வு…

By Meena

Published:

தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிபவர் வெற்றிமாறன். லயோலா கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட வெற்றிமாறன் கல்லூரி படிப்பை முடித்த பின்பு பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

என் இனிய பொன் நிலாவே, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் போன்ற பாலு மகேந்திராவின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். வெற்றிமாறன் பாலு மகேந்திராவை தனது குருவாகவும் வழிகாட்டியாகவும் நினைத்து சினிமாவின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.

2007 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனின் கனவை எடுத்துரைத்தது. பொல்லாதவன் திரைப்படத்தில் பல்சர் பைக் வருவதால் அந்த நேரத்தில் பல்சர் பைக் அதிகமாக விற்பனையானது. அதன் மூலம் பிரபலமானார் வெற்றிமாறன்.

அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு மறுபடியும் தனுஷ் உடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதோடு ஆறு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. பின்னர் 2016 ஆம் ஆண்டு விசாரணை 2019 ஆம் ஆண்டு அசுரன் திரைப்படத்தை இயக்கினார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை அசுரன் திரைப்படம் வென்றது. இது தவிர க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் வெற்றிமாறன்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன் அசுரன் திரைப்பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி அவர் கூறுகையில் மாரி செல்வராஜை பற்றி பாராட்டியும் பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் அசுரன் படத்துல வர்ற ‘அவங்களை நீ ஜெயிக்கணும்னு நினைச்சேன்னா நல்லா படி. படிச்சு அதிகாரத்தில் உட்காரு. அதிகாரத்துக்கு வந்ததுக்கு பிறகு அவங்க உனக்கு பண்ணத நீ வேற யாருக்கும் பண்ணாத’ அப்படிங்கிற டயலாக்கை அழகா மாத்தி எழுதி கொடுத்தது மாரி செல்வராஜ் தான் என்று கூறியுள்ளார் வெற்றிமாறன்.