விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவை 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து போடா போடி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். 2014 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் உடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். பின்னர் 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை எழுதி இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான சைமா விருதை வென்றார் விக்னேஷ் சிவன்.
அடுத்ததாக 2018 ஆம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கினார். பின்னர் பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன். தற்போது அவரது இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.
இது தவிர நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பின் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வாகித்து பல படங்களை தயாரித்தும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வெளியாக இருக்கும் வாழை திரைப்படத்தை பார்த்தபின் மாரி செல்வராஜை புகழ்ந்து X தளத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இந்த பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பது என்னவென்றால், மாரி செல்வராஜ், உன் வாழ்க்கையில் நல்ல பக்கங்களை மட்டுமே பார்த்துவிட்டு உனது படைப்புகளை நான் பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. தற்போது வாழை திரைப்படத்தின் மூலமாக உன் இருண்ட பக்கங்களை பார்க்கும்போது உன் மீதுள்ள மரியாதை ஆயிரம் மடங்காக அதிகரித்து இருக்கிறது. உன் படைப்புகளுக்கு மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும் என்று பாராட்டி பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.