எம்.ஜி.ஆர். செய்த உதவியை வேண்டாம் என்று மறுத்த நடிகர்.. இவ்ளோ நேர்மையானவரா?

By John A

Published:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டம் ஒன்றும் சும்மா கிடைத்து விடவில்லை. இல்லையென்று வருவோருக்கு வாரி வழங்கி கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் அது. இவரின் வள்ளல் தன்மையை அறிந்த கிருபானந்த வாரியார் அவருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கி பெருமைப்படுத்தினார். எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த நண்பர்களில் முக்கியமானவர் வி.எஸ்.ராகவன்.

இந்தத் தலைமுறைக்கு வி.எஸ்.ராகவனை இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பிரேயர் பாடல் மூலமாக எளிதில் தெரிந்திருக்கும். ஆனால் பழம்பெரும் நடிகரான வி.எஸ்.ராகவன் 1954-ல் வைரமாலை என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி சுமார் 1500 திரைப்படங்கள் வரை நடித்துச் சாதனை புரிந்திருக்கிறார்.

தனது 90 வயது வரை நடிப்பில் சிறந்து விளங்கிய வி.எஸ்.ராகவன் பின் வயோதிகத்தால் மறைந்தார். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருங்கிப் பழகிய வி.எஸ்.ராகவன் பத்திரிக்கையாளராக தனது வாழ்வைத் துவக்கி பின் நாடகத்தில் நடித்து அதன்பின் சினிமாவிற்கு வந்தவர். மேலும் கே.பாலச்சந்தரின் பெரும்பாலான நாடகங்களில் நடித்திருக்கிறார்.

ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்திருப்பார். இதனையடுத்து பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தனர். இவர்கள் நட்புக்கு அடையாளமாக எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற கௌரவத் தலைவர் பதவியை வழங்கி சிறப்பித்தார்.

பிரியா படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரே படத்தில் உச்சம் தொட்ட சூப்பர் ஸ்டார்.

ஒருமுறை வி.எஸ்.ராகவனின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அந்த தருணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனைக் கேள்விப்பட்டு வி.எஸ்.ராகவனுக்கு தாயின் மருத்துவச் செலவிற்காக ஒரு பெரும் தொகையை வி.எஸ்.ராகவனுக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

இதனால் எம்.ஜி.ஆர். மனம் வருந்தினார். அதன்பின் தான் பணம் வாங்காத காரணத்தை எம்.ஜி.ஆரிடம் தனக்கு வேண்டிய பணம் கிடைத்து விட்டதாகவும், இந்தப் பணத்தினை வேறொருவருக்கு உதவி செய்யுங்கள் என்று விளக்கம் கூறியிருக்கிறார்.

பணம் கொடுத்தவுடன் அதை வாங்கிக் கொள்பவர்களுக்கு மத்தியில் நேர்மையாக வி.எஸ்.ராகவன் சொன்ன பதிலால் எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போக அவர்களது நட்பு இன்னும் ஆழமானது.