ரக்சா பந்தனுக்கு லீவு கேட்ட பெண் ஊழியர்.. வேலையில் இருந்து தூக்கிய முதலாளி..!

ரக்சா பந்தனுக்கு லீவு கேட்ட பெண் HR மேனேஜர் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில்  HR மேனேஜர் வேலை பார்த்துக்…

layoff1

ரக்சா பந்தனுக்கு லீவு கேட்ட பெண் HR மேனேஜர் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில்  HR மேனேஜர் வேலை பார்த்துக் கொண்ட பெண் ஒருவர் ரக்சா பந்தன் நாளில் தனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதற்காக விடுமுறை கேட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி அன்றைய தினம் நிறுவனத்திற்கே விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் நிறுவன ஓனரிடம் பேசி உள்ளார்.

இதை ஏற்க மறுத்த நிறுவன ஓனர் திடீரென HR மேனேஜரை வேலை நீக்கம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வேலை இழந்த அந்த பெண் லிங்க்ட்-இன் பக்கத்தில் மிகவும் சோகமாக பதிவு செய்துள்ளார்.

ரக்சா பந்தன் நாளில் விடுமுறை அளிப்பது என்பது சட்டப்படி சரிதான் என்று நான் எனது நிறுவன முதலாளியிடம் விளக்கம் அளித்தேன். ஆனால் அவர் என்னை வேலையில் இருந்து தூக்கி விட்டு நோட்டீஸ் பீரியட் ஆக இரண்டு வாரம் மட்டும் தந்துள்ளார். இதனால் நான் உடனடியாக அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனக்கு மட்டுமின்றி சக ஊழியர்கள் அனைவருக்கும் பேச போய் என்னுடைய வேலை போய்விட்டது என்று அவர் சோகத்துடன் கூறி இருப்பதை அடுத்து இதற்கு நெட்டிசன்கள் பலவகையில் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.