தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இந்தியாவின் முக்கியமான பிரபலங்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அதனால் தனது இளம் பருவத்திலேயே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்.
தனது 18 வது வயதிலேயே நாயகனாக அறிமுகமானார் விஜய். 1990களில் சிறந்த கதையம்சம் கொண்ட காதல் படங்களில் நடித்த விஜய் 2000 களின் ஆரம்பத்தில் சமூக நீதியை எடுத்துரைக்கும் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
2000களில் பிற்பகுதியில் விஜய் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் தான் என்ற பெயரை பெற்று முன்னணி நடிகரானார். தற்போது விஜய் படங்களில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு அரசியல் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தமிழக மக்களுக்காக பணியாற்ற விரும்பி ஆரம்ப கட்டமாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.
ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு நிரந்தரமாக அரசியலில் இறங்க உள்ளதாக விஜய் திட்டமிட்டுள்ளார். விஜய் நடித்த கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோட் திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பும் அதன் அப்டேட்களுக்காகவும் காத்திருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால் நடிகர் விஜயின் 69 வது படத்தை யார் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் தான் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இயக்குனர் எச் வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.