கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை துல்லியமாக கணிக்கும் ஏஐ டெக்னாலஜி..!

By Bala Siva

Published:

ஏஐ டெக்னாலஜி மூலம் துல்லியமாக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கலாம் என்று புவனேஸ்வர் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐ டெக்னாலஜி என்பது வளர்ந்து வரும் டெக்னாலஜியாக இருக்கும் நிலையில் அடுத்த தலைமுறையினர் இந்த டெக்னாலஜி மூலம்தான் அதிகமாக பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அறிவியல் துறை , சினிமா துறை, ஐடி துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தட்பவெப்ப நிலையை கணிக்கும் துறையிலும் ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏஐ டெக்னாலஜி மூலம் முன்கூட்டியே கனமழை பெய்வதையும் கனமழையால் ஏற்படும் சேதங்களையும் கண்டுபிடிக்கலாம் என்றும் இதன் மூலம் பேரழிவிலிருந்து பொதுமக்களை காப்பாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐஐடி புவனேஸ்வர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இது குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு அசாம் மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் கனமழை இருந்து பொதுமக்களை காப்பாற்ற உதவும் என்று கூறியுள்ளனர். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது.