வருமான வரி தாக்கல் செய்தும் இன்னும் ரீபண்ட் பணம் வரவில்லையா? என்ன செய்ய வேண்டும்?

By Bala Siva

Published:

ஜூலை 31 ஆம் தேதியுடன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் பெரும்பாலான மக்கள் வருமான வரி தாக்கல் செய்து விட்டனர் என்பது தெரிந்ததே. அதன் பின்னரும் அபராத தொகையுடன் ஒரு சிலர் இன்னும் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்து முடிந்தவுடன் ரீபண்ட் பணம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்கள், இதுவரை ரீபண்ட் படம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் பான் கார்டு பயன்படுத்தி ரீபண்ட் நிலைமை எந்த விதத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு  www.incometax.gov.in என்ற இணையதளம் சென்று பான் கார்டு மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாகின் செய்ய வேண்டும். பின்னர்  ‘இ-ஃபைல் டேப்’ சென்று ‘view Fileified return’ என்பதை தேர்வு செய்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட்டர்ன் விவரங்களையும் அறியலாம்.

அதன்பின்னர் NSDL இணையதளம் சென்று உங்கள் வரி ரீஃபண்ட் நிலையை தெரிந்து கொள்ளலாம். உங்கள் பான் எண் மற்றும் நடப்பு ஆண்டை தேர்வு செய்தால் உங்கள் ரீபண்ட் பணம் குறித்த தகவல் இருக்கும். உங்களுக்கு ரீபண்ட் அனுப்பப்பட்டதா? இல்லையெனில் என்ன காரணம்? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.