முதல் மரியாதை படம் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு. பாரதிராஜாவும், சிவாஜியும் இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
முதல் மரியாதைப் படத்தைப் பற்றிப் பலரும் பலவிதமாக சொல்லும் கருத்துகள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே சிவாஜிக்கிட்ட பாரதிராஜா உங்க மேக்கப் எல்லாம் இதே மாதிரி இருக்கக்கூடாதுன்னு சொன்னாராம். அதனால் அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.
முதல் மரியாதை படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு சிவசமுத்திரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தான் தொடங்கியது. காலை 9 மணிக்கு ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை 6 மணி வரை தொடர்ந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் தான் தெரிந்தது.
அடடா அந்த விஷயத்தை யாரும் கவனிக்கவில்லையே என்று. அன்று சூட்டிங் முடிந்ததும் பாரதிராஜாவின் முகத்தில் ஒரு பரிதவிப்பு இருந்ததைக் காண முடிந்தது. சிவாஜி கேரக்டர்படி செருப்பு போடக்கூடாது. ஆனால் அன்றைய தினம் போட்டு நடித்து இருந்தார். இதை யாரும் கவனிக்கவில்லை.
அது மட்டும் பரிதவிப்புக்குக் காரணம் என்று சொல்லி விட முடியாது. அதையும் தாண்டி ஒரு காரணம் இருந்தது. பாரதிராஜாகிட்ட ‘என்ன விஷயம்? ஏன் இப்படி இருக்கீங்க?9’ன்னு கேட்டேன்.
‘முதல் நாள் படப்பிடிப்பிலே சிவாஜி விக் வைத்து நடித்தார். எனக்கு என்னமோ அந்த விக் கொஞ்சம் கூட ஒட்டலைன்னு தோணுது. அவரோட ஒரிஜினல் தலைமுடியே போதும். அதை அப்படியே சீவிட்டு வந்தால் போதும்.
வேறு எந்த மேக்கப்பும் வேணாம்னு சொல்லிடு’ன்னு எங்கிட்ட சொன்னாரு. அவரு சொன்னதும் நான் லேசா சிரிச்சேன். ‘சிவாஜிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்குது. அவரை வச்சிப் படங்கள் எல்லாம் எடுத்துருக்கேன்.
ஆனா இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் நீங்க அவருக்கிட்ட சொன்னா தான் நல்லாருக்கும்னு சொன்னேன். நான் சொன்னா நிச்சயமா நல்லாருக்காது. ஒண்ணு செய்யுங்க. நாம ரெண்டு பேரும் போவோம். நீங்க சொல்லுங்க. நான் பக்கத்துல நிக்கேன்’னு சொன்னேன்.
சிவாஜிக்கிட்ட அவரு சொன்னதும் அவரு குழந்தை மாதிரி. அவர் சொன்னதுக்கு எல்லாம் உடன்பட்டார். இயக்குனர் தான் எப்படி இருக்கணும்னு விரும்புறாங்களோ அப்படி தன்னை மாற்றிக் கொள்வார். அப்படிப்பட்ட அற்புதக்கலைஞர் அவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.