விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ரூபாய் 1578 முதல் விமான பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சுதந்திர தின விடுமுறை தினத்தில் ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்கும் என்றும் ஒரு சில விமான நிறுவனங்களில் 30 சதவீதம் வரை டிக்கெட் கட்டணம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் சிறப்பு சலுகை அடிப்படையில் ரூபாய் 1578 முதல் விமான கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ:
1. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாக்டாக்ரா நகரில் இருந்து டிப்ருகார் வரை பயணம் செய்வதற்காக பிசினஸ் கிளாஸில் ஒரு வழி கட்டணங்கள் ரூ .1,578 மட்டுமே.
2. மும்பையிலிருந்து அகமதாபாத் வரை பிரீமியம் பிசினஸ் வகுப்பில் கட்டணம் ரூ .2,678 மட்டுமே.
3. மும்பையிலிருந்து அகமதாபாத் வரை பிசினஸ் வகுப்பில் ரூ .9,978 மட்டுமே.
4. டெல்லியில் இருந்து காத்மாண்ட் செல்ல பிசினஸ் வகுப்பில் ரூ .11,978 மட்டுமே. அதேபோல்
பிரீமியம் பிசினஸ் வகுப்பில் ரூ .13,978 மட்டுமே.
சுதந்திர சலுகையின் கீழ் முன்பதிவு செய்யப்படும் கட்டணங்கள் திருப்பிச் செலுத்த முடியாதவை என்றும் விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் சுதந்திர விற்பனை குறித்த கூடுதல் விவரங்களை விஸ்டாரா விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.airvistara.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச நகரங்களான அபுதாபி, பாலி, பாங்காக், கொழும்பு, டாம்மாம், டாக்கா, துபாய், தோஹா, பிராங்பேர்ட், ஹாங்காங், ஜெடா, காத்மாண்டு, லண்டன், மாலே, மொரீஷியஸ், மஸ்கட், மற்றும் சிங்கப்பூர், பாரிஸ் ஆகிய நகரங்களுக்கு தள்ளுபடி கட்டணம் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.