பிரபல நடிகையின் உடையில் அன்னை மேரியின் உருவப்படம்.. மன்னிப்பு கேட்டதால் முடிவுக்கு வந்த சர்ச்சை..!

பிரபல நடிகையின் உடையில் அன்னை மேரியின் உருவப்படம் இருந்த நிலையில் கிறிஸ்தவ மதத்தின் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த நடிகை மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில்…

urvashi

பிரபல நடிகையின் உடையில் அன்னை மேரியின் உருவப்படம் இருந்த நிலையில் கிறிஸ்தவ மதத்தின் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த நடிகை மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ‘லெஜண்ட்’ என்ற படத்தில்  நடித்தவருமான ஊர்வசி ரௌட்டாலா சமீபத்தில் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியை காண சென்றிருந்தார். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்பதும் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டு இருந்த ஒரே நடிகை அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அவர் பார்வையாளராக கலந்து கொண்ட போது அவர் அணிந்திருந்த ஆடை தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அவர் அணிந்திருந்த ஆடையில் அன்னை மேரி உள்பட சில உருவங்கள் இருந்த நிலையில் அன்னை மேரி உருவப்படம் கொண்ட ஆடையை அணிந்ததற்காக கிறிஸ்தவ மதத்தின் சார்பில் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து ஊர்வசியின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்த போது ’இந்த ஆடை பாரீசில் உள்ள டிசைனர் ஒருவர் செய்து கொடுத்தது என்றும் அதில் உள்ள உருவப்படங்களை நாங்கள் சரியாக கவனிக்கவில்லை என்றும் அது எங்கள் தவறுதான் என்றும் இந்த தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.