மழைக்காலம் நெருங்கி வருவதை எடுத்து இந்த மழைக்காலத்தில் சில முக்கிய பாலிசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்று கூறப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் வாகன விபத்து அடிக்கடி நடக்கும் என்பதால் வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக விபத்துக்கான பாலிசிகளை எடுத்து வைத்துக்கொள்வது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.
விபத்தில் பாலிசிதாரர்களுக்கு ஊனம் ஏற்பட்டால் அதற்கான நிதி இன்சூரன்ஸ் வழங்கும் என்பதும் விபத்தில் அடைந்த காயம் அடைந்தால், அந்த காயம் குணமாகும் வரை அந்த காப்பீடு உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து காரணமாக பாலிசிதாரர் தற்காலிகமாக வேலை செய்ய முடியாமல் போனால் இழப்பீடு தொகை அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கும்.
அதேபோல் விபத்துக்கள் ஏற்படும் போது மருத்துவ சிகிச்சைக்காக தனியாக பாலிசிகள் உள்ளன. அறுவை சிகிச்சை உள்பட பெரிய சிகிச்சை என்ற நிலை வரும்போது பெரிய தொகை செலவாகும். அதற்காக தனியாக பாலிசி எடுத்து வைத்துக் கொண்டால் மிகுந்த உதவியாக இருக்கும்.
தனிநபர் விபத்து காப்பீடு என்பது மழைக்காலத்தில் மிகவும் முக்கியமானது. பாலிசிதாரர்கள் விபத்து காரணமாக மரணம் அடைந்து விட்டாலோ அல்லது ஊனமாகி விட்டாலோ இந்த பாலிசி அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இழப்பீடாக வழங்கப்படும்.
மழைக்காலத்தில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதும், மழை நீர் தேங்கி இருப்பதால் பள்ளங்கள் தெரியாமல் விபத்துக்கள் அடிக்கடி நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நம்மூர் சாலைகளில் பயணம் செய்யக்கூடிய இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தனிநபர் விபத்து காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை மழைக்காலத்தில் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே மழைக்காலம் இன்னும் சில மாதங்களில் நெருங்கி வரும் நிலையில் இந்த பாலிசிகளை தகுந்த ஆலோசனை பெற்று எடுத்து வைத்துக் கொண்டு பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.