இரண்டு நண்பர்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் வெறும் 15000 ரூபாய் முதலீடு செய்து ஒன்றரை கோடி வரை சம்பாதித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் என்பது தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அறிவியல் முதல் சினிமா வரை அனைத்து துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதும் வருங்காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் இல்லாமல் எந்த பணியும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இரண்டு இளைஞர்கள் பணி செய்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் மீதி நேரத்தில் நெட்பிளிக்ஸில் சினிமா பார்த்து பொழுதை கழித்து வந்தனர். ஒரு கட்டத்தில் நெட்பிளிக்ஸ் சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டு சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அவர்கள் ChatGPT உதவியால் தொழில் செய்வதற்கான ஐடியா என்ன என கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை பெற்றனர்.
ஒரு தொழில் தொடங்குவதற்கு என்னென்ன ஐடியா தேவைப்படும்? தொழில் தொடங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன? தொடங்கியபின் அதை வளர்ச்சி பெற வைப்பது எப்படி? என்பது போன்ற கேள்விகளை ChatGPT மூலம் கேட்டு, அந்த பதில்களை வைத்தே ஒரு இணையதளத்தை உருவாக்கி அந்த இணையதளத்தில் தொழில் தொடங்குபவர்கள் எங்கள் ஐடியாக்களை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து இதன் மூலம் தற்போது அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் தங்கள் இணையதளத்திற்கு செலவழித்தது வெறும் 15000 ரூபாய் மட்டுமே என்றும் ஆனால் இன்று ChatGPT மூலம் பெற்ற தகவல்களை விற்பனை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி எல்லாம் வருமானம் பெறலாம் என்பதை இந்த நண்பர்கள் நிரூபித்து நிலையில் நீங்களும் வித்தியாசமாக சிந்தித்தால் இதேபோன்று மிகப்பெரிய வருமானத்தை பெறலாம்.