டைட்டானிக் கப்பலில் உயிரிழந்த நபர்.. 40 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு கிடைத்த எச்சரிக்கை.. மர்ம பின்னணி..

By Ajith V

Published:

வரலாற்றில் எதிர்பாராமல் நடந்த சில விபத்துகள் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் நிச்சயம் மறந்து போகாத அளவுக்கு ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அப்படி வரலாற்றில் இருந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்கப்படாத ஒரு பெரும் விபத்தை தான் டைட்டானிக் கப்பல் சந்தித்திருந்தது. கடந்த 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் உருவாக்கப்பட்டது.

மேலும் இந்த கப்பல் எந்த காரணத்தை கொண்டும் நீரில் மூழ்காது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் பகுதிக்கு சென்றுள்ளது. அந்த சமயத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த கப்பல், இரவு நேரத்தில் ரேடார் இல்லாத காரணத்தினால் ஒரு பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது.

அத்துடன் இரண்டாக உடைந்த கப்பலில் இருந்து சுமார் 1500 பேர் உயிரிழந்து போயினர். டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து நூறாண்டுகளுக்கு மேலான போதிலும் இன்னும் அதில் சில மர்மங்கள் நீடித்து தான் வருகிறது. அப்படி இருக்கையில், இந்த கப்பலில் பயணித்து உயிரிழந்த ஒரு நபரின் பின்னணி தற்போது பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கடந்த 1840 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உருகுவே நாட்டின் மோன்டேவிடியோ என்ற பகுதியில் பிறந்தவர் தான் Ramon Artagaveytia. இவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக கடல் சார்ந்து தொழிலை மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. கடந்த 1871 ஆம் ஆண்டு அமெரிக்கா என்ற கப்பலில் ரேமன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த கப்பலில் மொத்தம் 160 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கடல் பிரயாணத்தின் போது வேறொரு கப்பலுடன் அவர்கள் பந்தயம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதன் பாயிலரில் அதிக அழுத்தம் உருவாகி தீ ஏற்பட்டு கப்பல் முழுவதும் பிடிக்க தொடங்கி உள்ளது.

இதனை அதிலிருந்த யாருமே எதிர்பாராத சூழலில், ஏறக்குறைய தீயில் கருகி 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் 65 பேர் தப்பிக்க அதில் ரேமனும் கடலில் குதித்து நீந்தி உயிரை காத்துள்ளார். அந்த சமயத்தில் மிக மோசமான கப்பல் தீ விபத்தாக இது இருக்க, உயிர் தப்பித்தாலும் பயந்து போயுள்ளார் ரேமன். அது மட்டுமில்லாமல், அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அழுகுரல் பல வருடங்களுக்கு கேட்டுக் கொண்டே இருந்ததாகவும், இதன் காரணமாக கடும் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

ஒரே ஒரு விபத்தால் தூக்கம் தொலைத்து நடை பிணம் போல வாழந்து வந்த ரேமன், அமெரிக்கா கப்பல் விபத்தில் இருந்து வெளியே வருவதற்கே 40 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாம். மேலும் அந்த 40 ஆண்டுகள் எந் கப்பலிலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்த ரேமன், 1912 ஆம் ஆண்டு தான் ஓரளவுக்கு நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் தான், டைட்டானிக்கில் சுமார் 40 ஆண்டுகள் கழித்து முதல் கப்பல் பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார் ரேமன். இந்த டைட்டானிக் கப்பல் குறித்து பயணத்திலேயே தனது நண்பர்களுக்கு கடிதங்களையும் ரேமன் எழுதிய சூழலில் தான் அடுத்த சில தினங்களில் விபத்து ஏற்பட்டு அதில் உயிரிழந்த 1500 பயணிகளில் ஒருவராகவும் அவர் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...