தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்… நீண்ட கால முதலீட்டில் எது லாபகரமானது?

By Bala Siva

Published:

நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கம், பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் இதில் எதில் முதலீடு செய்யலாம் என்று குழப்பம் இருக்கும் நிலையில் இது குறித்து பொருளாதார ஆய்வாளர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை பார்ப்போம்.

பொதுவாக இந்தியர்கள் சேமிப்பு பழக்கத்தை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர் என்ற நிலையில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் தங்க நகை, தங்க நாணயம், டிஜிட்டல் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. தங்கத்தின் முதலீடு செய்தால் நம்பிக்கையாக இருக்கும் என்று நஷ்டம் அடைய வாய்ப்பில்லை என்றும் அது மட்டும் இன்றி அவசர தேவைக்கு உடனடியாக பணத்தை மாற்றிக் கொள்ள உதவுவது தங்கம் மட்டுமே என்பதுதான் இந்தியர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தங்கத்தை அடுத்து இந்தியர்கள் அதிகம் முதலீடு செய்வது ரியல் எஸ்டேட் என்றாலும் இதில் உடனடியாக பணமாக மாற்றும் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டுகள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களின் முக்கியமான முதலீடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம், ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்ய காரணம் அது பாதுகாப்பான முதலீடு என்று மக்கள் மனதில் பதிந்து இருப்பது தான். ஆனால் அதே நேரத்தில் தங்கம் ,ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டுமே சிறப்பான வருவாயை கொடுக்குமா என்றால் அது சந்தேகம் தான். இவை இரண்டையும் விட மியூச்சுவல் பண்டுகள் தான் சிறந்த முதலீடு என்பதை கடந்த சில ஆண்டுகளாக மக்கள் புரிந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் திடீரென்று சரியும் என்பதும் பங்குச்சந்தையும் சரிவை சந்தித்தாலும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் மற்றும் பங்குச்சந்தை ஆகிய இரண்டையும் ஒப்பிடும்போது தங்கத்தை விட பங்குச் சந்தையில் அதிக லாபம் கிடைத்திருப்பதாக தான் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் குறைந்தபட்சம் 15 சதவீதம் அதிகபட்ச 30, 40 சதவீதம் கூட வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதாக இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றும் குறுகிய காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் எந்தவித பலனும் தராது என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் தங்கம், பங்குச்சந்தை  மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மூன்றில் மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே லாபமானதாக இருந்தாலும் அனைத்திலும் பிரித்து முதலீடு செய்வதே நல்லது என்றும் மியூச்சுவல் பண்டில் கூடுதலாக முதலீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய முதலீட்டு ஆலோசகர்களிடம் அறிவுரை கேட்டு கவனத்துடன் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.