பி.எஸ்.என்.எல் தற்போது தனது சந்தாதாரர்களுக்கு 4ஜி நெட்வொர்க்கை வழங்கி வரும் நிலையில் 5ஜி நெட்வொர்க்கையும் விரைவில் வழங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் 5ஜி நெட்வொர்க் சோதனை செய்யப்பட்டதாகவும், பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய நிதியா, 5ஜி தொழில்நுட்ப மூலம் வீடியோ காலில் பேசிய வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 4ஜி நெட்வொர்க் பிஎஸ்என்எல் வழங்கி வரும் நிலையில் அது சிறப்பாக இருப்பதாக பயனாளர்கள் கூடிவரும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு முன்னணி தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்கள் சந்தாவை அதிகரித்து விட்டதை அடுத்து பி.எஸ்.என்.எல் சிம்முக்கு ஏராளமானோர் மாறி வருகின்றனர்.
ஆந்திராவில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கு 82,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதை அடுத்து விரைவில் 5ஜி நெட்வொர்க்கை பி.எஸ்.என்.எல் தனது பயனாளிகளுக்கு விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://x.com/JM_Scindia/status/1819285264084152692