தங்கலான் படத்திற்காக இந்த மாதிரியெல்லாம் கஷ்டப்பட்டேன்… விக்ரம் எமோஷனல்…

By Meena

Published:

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் விக்ரம். இவரது இயற்பெயர் கென்னடி என்பதாகும். இவரது தந்தை வினோத் ராஜ் முன்னாள் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். விக்ரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்,திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் ஒருவர் நடிகர் விக்ரம்.

ஆரம்பத்தில், விக்ரம் 1988 ஆம் ஆண்டு கைலாச பாலச்சந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் முதலில் நடித்து அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார் விக்ரம்.

பின்னர் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த விக்ரம், 1999 ஆம் ஆண்டு ‘சேது’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஏராளமான ரசிகர்களை பெற்றார். சேது திரைப்படம் விக்ரமின் கேரியரில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அதற்குப் பின்பு விக்ரம் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘தில்’, ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’, ‘பிதாமகன்’, ‘காசி’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது. அடுத்ததாக ‘அந்நியன்’ என்னும் பிரம்மாண்டமான படத்தில் நடித்த விக்ரம், படம் வெற்றி அடைந்ததால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தொடர்ந்து ‘அருள்’, ‘மஜா’,’பீமா’, ‘கந்தசாமி’, ‘ராவணன்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘சாமி 2’ என வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமானார் விக்ரம்.

கடந்த ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி புகழடைந்தார் விக்ரம். தற்போது விக்ரம் அவர்களின் வித்தியாசமான கெட்டப்பிலும் மிரட்டலான நடிப்பிலும் ‘தங்கலான்’ படம் உருவாகியுள்ளது.

தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்காக விக்ரமின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். தற்போது தங்கலான் பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விக்ரம், இப்படத்திற்காக தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், தங்கலான் படத்தில் நடிப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தேன். கெட்டப் ஃபுல்லா சேஞ்ச் பண்ண வேண்டியதாக இருந்தது. அந்தப் படத்திற்காக பட குழுவினர் எத்தனையோ பேரு முன்னாடி வெறும் கோமணத்தோடு நான் நின்றிருக்கிறேன். சூட்டிங் செய்த இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தன. எத்தனையோ தடவை கட்டுவிரியன் பாம்புகளை என் கையால் பிடித்து தூக்கி போட்டு அப்புறப்படுத்தி இருக்கிறேன். இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் விக்ரம்.