நீங்க மதுரைக்காரரா..? கொண்டாடத் தயாராகுங்கள் மா மதுரைத் திருவிழாவை..

By John A

Published:

தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத சிறப்பு மதுரைக்கு இருக்கிறது. அது என்னவெனில் வருடம் முழுக்க திருவிழா நடக்கும் ஒரே மாவட்டம் மதுரை மாவட்டம் தான். அதனால் தான் மதுரை நகரின் வீதிகளுக்கு சித்திரை வீதி, ஆணி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்கள் பலவற்றில் தெருக்கள் இருக்கின்றன. அந்த மாதங்களில் அங்கு திருவிழாக்கள் நடைபெறுவது பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்து நடைமுறையில் உள்ள வழக்கம்.

தற்போது மதுரை என்றாலே இப்போது சினிமாவில் காட்டப்படுவது வன்முறையும் அரிவாள் கலாச்சாரமும் தான். ஆனால் மதுரை மக்களின் மனது எப்போதும் மதுரை மல்லிகையைப் போல தூய வெண்மையானது. இந்த மதுரையை மேலும் போற்றும் வகையிலும், மதுரையின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வண்ணம் மாமதுரை விழா நடைபெற உள்ளது. இதனால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 8 முதல் 11-ம் தேதி வரை இத்திருவிழா நடைபெறுகிறது.

இனி குழந்தைகள் காணாமல் போக வாய்ப்பே இல்லை.. வருகிறது புதுவித ஆப்பிள் வாட்ச்..!

இதனால் மதுரை மாநகரைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களான பெரியார் நிலையம், தமுக்கம் போன்ற இடங்களில் மதுரையின் பெருமையைப் போற்றும் வகையில் வெளியூர் பயணிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு பல வண்ண ஓவியங்கள், அலங்கார பொம்மைகள் போன்றவை நிறுவப்பட்டுள்ளன.

யங் இந்தியன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாமதுரை விழாவானது தமுக்கம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூர் கண்மாய், மடீட்சியா அரங்கம், வைகை ஆற்றங்கரை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பட்டம் விடும் திருவிழா, உணவுத் திருவிழா, சைக்கிள் பயணம், அடுக்குமாடி பேருந்து பயணம் என சுற்றுலாவினை மேம்படுத்தக்கூடிய பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னர்கள் காலத்து பாரம்பரிய நகரான மதுரை பல சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது. தூங்கா நகரத்தில் இந்த மாமதுரைத் திருவிழாவினை கண்டுகளித்து போட்டிகளில் பங்குபெற மதுரை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.