பேஸ்புக், இன்ஸ்டாகிராமை பின்னுக்கு தள்ளிய எக்ஸ் தளம்.. ஆதாரத்தை வெளியிட்ட எலான் மஸ்க்..!

By Bala Siva

Published:

ஏராளமான சமூக வலைதளங்கள் ஆன்லைனில் கொட்டி கிடந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில சமூக வலைதளங்களுக்கு மட்டுமே மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பது தெரிந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேஸ்புக், தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது என்பதும் அதன் பின்னர் தான் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை இருந்த நிலையில் தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்னர் எக்ஸ் என பெயர் மாற்றிய நிலையில் இந்த தளத்திற்கு கூடுதல் பயனாளிகள் கிடைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று கடந்த ஜூன் மாதத்தில் அதிக அளவு பார்வையாளர்களை பெற்றது எக்ஸ் தளம் தான் என ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜூன் மாதத்தில் எக்ஸ் தளம் 13.14 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும் பேஸ்புக் சமூக வலைதளம் 12.44 பில்லியன் , இன்ஸ்டாகிராம் 5.798 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அதேபோல் எக்ஸ் தளத்திற்கு 3.127 மில்லியன் தனித்துவமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாகவும், இது ஃபேஸ்புக் தனித்துவமான பார்வையாளர்களை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக் தளத்திற்கு 1.050 பில்லியன் தனித்துவ பார்வையாளர்களும் இன்ஸ்டாகிராமுக்கு 919 மில்லியன் தனித்துவ பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர் என்று இணையதளம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளம் என்ற பெருமையை எக்ஸ் பெற்றுள்ளது என்பதும் இந்த நிலையை எக்ஸ் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.