பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்நத் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி தங்கள் தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்தியா சார்பில் இதுவரை துப்பாக்கி சுடுதல் பிரிவில் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து மற்ற போட்டிகளிலும் இந்திய வீரர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி பதக்க வாய்ப்பினை நழுவ விட்டார். நேற்று நடைபெற்ற 6-வது நாள் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கயி பி.வி.சிந்து சீனாவின் ஹி பிங்க்ஜியோவுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டிலேயே 19-21 என்ற செட்டில் இழந்தார். இதனையடுத்து 2-ஆவது செட்டிலும் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற கணக்கில் போரடிய பி.வி.சிந்து 14-21 என்ற கணக்கில் இழந்து வெற்றி வாய்ப்பினைத் தவற விட்டார்.
தினமும் ரூ.300 சம்பாதிக்கும் ஏழை தொழிலாளி.. திடீரென வைரம் கிடைத்ததால் லட்சாதிபதி..!
இதன் மூலம் இந்தியாவே எதிர்பார்த்த பி.வி.சிந்து பதக்கக் கனவு தகர்ந்தது. ஆனால் பி.வி. சிந்து 2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும் வென்றார் பி.வி.சிந்து. இந்தமுறையும் பதக்கம் வென்று ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியைத் தழுவியது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் வீரர்கள் அணிவகுப்பு விழாவில் இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.