கோவையில் பிறந்து வளர்ந்தவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிசுவாமி என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சிவகுமார் 3 தென்னிந்திய ஃபிலிம் ஃபார் விருதுகளையும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர்.
1965 ஆம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிவகுமார். அடுத்ததாக 1966 ஆம் ஆண்டு ‘சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தில் நடித்தார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் முருகராக நடித்து பேரும் புகழும் அடைந்தார். முருகன் கதாபாத்திரத்தில் சிவகுமாரின் உடல் தோற்றமும் முகமும் முருகனை நேரில் பார்த்தது போல் இருக்கும். அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சிவகுமார். தொடர்ந்து ‘திருமால் பெருமை’ போன்ற பல பக்தி படங்களில் நடித்துள்ளார் சிவகுமார்.
‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, ‘அன்னக்கிளி’, ‘வண்டிச்சக்கரம்’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’,’இன்று நீ நாளை நான்’, ‘மனிதனின் மறுபக்கம்’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் சிவகுமார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகிய பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சிவகுமார். இது தவிர ராதிகாவின் பிரபல சீரியல்களான சித்தி மற்றும் அண்ணாமலை தொடர்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார் சிவகுமார்.
சிவக்குமார் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் சூர்யா கார்த்தி மற்றும் பிருந்தா. இதில் சூர்யா மற்றும் கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெரும் எதிர்ப்பை தாண்டி நடந்தது. அதை பற்றி முதன் முறையாக நடிகர் சூர்யாவின் தந்தையான சிவகுமார் ஓபனாக பேசியுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், சூர்யா மற்றும் ஜோதிகா வேறு வேறு சமூகம் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு நான் ஒத்துக் கொள்ளவே இல்லை. வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் இருவரும் பண்ணினால் நாங்கள் இருவரும் தான் திருமணம் செய்து கொள்வோம் இல்லை என்றால் கல்யாணமே செய்யாமல் தனியாவே வாழ்ந்து விடுவோம் என்று நான்கு வருடங்கள் காத்திருந்தனர். அதற்குப் பிறகு தான் இவர்கள் காதலில் உறுதியாக இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்பு தான் அவர்கள் திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவித்தேன் என்று பகிர்ந்துள்ளார் பழம்பெரும் நடிகர் சிவகுமார்.