குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா…? அவர்களின் வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும்…

By Meena

Published:

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் நவகிரகங்களிலே மிகவும் சிறந்தவர் என்று போற்றப்படுபவர் குருபகவான். நம் வாழ்வில் சுப காரியங்களை நடத்துபவர் குரு பகவான். அதனால் வாழ்வில் நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவோர் குரு பகவானை வழிபடுவர்.குரு பகவான் தேவர்களின் குருவும் பிரகஸ்பதியும் ஆவார்.

தட்சிணாமூர்த்தி தென்திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகிறார்கள் தட்சிணாமூர்த்தியை பரமகுரு எனவும் பஞ்சகுண சிவ மூர்த்திகளில் சாந்த மூர்த்தி ஆகவும் அழைக்கப்படுகிறார். கல்வி, கேள்வி, ஞானம், கலைகளில் வல்லமை, பெயர், புகழ் ஆகியவற்றைப் பெற தட்சிணாமூர்த்தி வணங்குவர்.குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வர்

நவகிரகங்களில் சிறந்தவர் குரு பகவான். ஞானத்தின் குரு ஞானத்தின் குரு என்று அழைக்கப்படுபவர் தட்சிணாமூர்த்தி. ஆனால் மக்கள் இவ்விரு கடவுள்களும் ஒருவர்தான் என்று நினைத்து மக்கள் குழம்பி கொள்கின்றனர. குரு பகவானும் தட்சிணாமூர்த்தியும் வேறு வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தட்சணாமூர்த்தி சிவவடிவம் கொண்டிருப்பவர். குருபகவான் கிரக வடிவத்தை கொண்டிருப்பவர். தட்சிணாமூர்த்தி 64 சிவ வடிவங்களில் ஒருவராகவும் குரு ஒன்பது கோளில் ஐந்தாவது ஆகவும் இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு தோன்றுதல் மறைதல் தன்மைகள் இல்லை ஆனால் குரு பகவானுக்கு உதயம் அஸ்தமனம் தன்மைகள் உண்டு. குருபகவான் மஞ்சள் நிற ஆடையை உடுத்தி இருப்பார். அவருக்குரிய தானியம் கொண்டைக்கடலை ஆகும். ஆனால் தட்சிணாமூர்த்தி வெண்ணிற ஆடை உடுத்திருப்பவர்.

குரு பகவானை வழிபட விரும்புபவர்கள் பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் வியாழக்கிழமை செய்வதுண்டு. ஆனால் மக்கள் மஞ்சலாடையும் கொண்டைக்கடலை மாலையும் தவறுதலாக தட்சிணாமூர்த்திக்கு சாற்றுகிறார்கள். இவ்வாறு செய்தல் தவறாகும். ஞானத்தை வேண்டுபவர்கள் மட்டுமே தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும் வியாழக்கிழமை தான் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும் என்பதல்ல எல்லா நாட்களும் வழங்கலாம். இனி குரு பகவான் யார் தட்சிணாமூர்த்தி யார் என்பதை தெரிந்துக் கொண்டு வணங்குங்கள்.