நடிகர் பிரசாந்துக்கு எதிராக பாய்ந்த வழக்கு.. புல்லட்டில் சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்

By John A

Published:

தமிழ் சினிமாவில் இப்போது உள்ள முன்னனி நடிகர்களுக்கு நிகராகத் திகழ்ந்து பெண்கள் மத்தியில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த நடிகர்தான் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் ஜீன்ஸ் படத்தில் உச்சம் தொட்டது. அஜீத், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் டிஜிட்டல் முறையில் டெக்னாலஜியை பயன்படுத்தியவரும் பிரசாந்தே. இப்படி உச்ச நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தினை வைத்திருந்த பிரசாந்த் பொன்னர் சங்கர் படத்திற்குப் பின்னர் அவரது திரை வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பிளாப் ஆக சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார். பின் தெலுங்குப் படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்தார். இதனால் இவரது ரசிகர்கள் பிரசாந்துக்கு இப்படி ஓர் நிலையா என்று எண்ணிய வேளையில் அந்தகன் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் திரைப்படம் திரைக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில் தளபதி விஜய்யுடன் கோட் படத்திலும் நடித்துள்ளார் பிரசாந்த். இப்படி அடுத்தடுத்து அவரது கால்ஷீட் டைரி நிரம்பி வழிவதால் மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார் பிரசாந்த்.

இனி சினிமா டிக்கெட்டும் ரிசர்வ் செய்யலாம்.. ஜொமேட்டோ அறிமுகம் செய்த புதிய செயலி..!

இந்நிலையில் சமூக ஊடகங்களில் தற்போது பேட்டிகளை அளித்து வரும் பிரசாந்த் தனியார் யூடியூப் சேனலுக்காக பேட்டியில் சென்னை திநகர் பாண்டி பஜார் பகுதியில் டூவீலர் ஓட்டிக் கொண்டே பொதுவெளியில் பேட்டி கொடுத்தார். இந்தப் பேட்டியின் போது புல்லட் பைக்கில் சென்ற பிரசாந்தை பின்னால் நேர்காணல் செய்பவரும் அமர்ந்து வந்தார்.

இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. சாதாரண பொதுமக்களுக்குத்தான் உங்கள் சட்டமா? நடிகர்களுக்கெல்லாம் இல்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை நடிகர் பிரசாந்துக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதமாக ரூ.1000 விதித்தது. மேலும் பின்னால் அமர்ந்து சென்றவருக்கும் 1000 ரூபாய் என 2000 அபராதம் விதித்தனர்.

மேலும் இவர்கள் செல்லும் போது எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தியிருக்கின்றனர்.