இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் ரூபாய் 32000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் பங்கு சந்தையில் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் ரூபாய் 32,403 கோடி வரி பாக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகள் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட செலவினங்களுக்கு 32,403 கோடி ஜிஎஸ்டி வரி நிலுவையில் உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனர் அலுவலகம் தரப்பிலும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க இன்போசிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்போசிஸ் நிறுவனம் பதில் அளித்த நிலையில் ’இத்தகைய செலவுகளுக்கு ஜிஎஸ்டி வரி பொருந்தாது என்றும் ஜிஎஸ்டி குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரியும் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வெளிநாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் கிளைகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் ஜிஎஸ்டிக்கு வரம்புகள் வராது என்றும் கூறியுள்ளது.
மேலும் மத்திய மாநில அரசுகளின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஜிஎஸ்டி வரிகளை முழுமையாக நாங்கள் செலுத்தி உள்ளோம் என்றும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.