இதற்கு முன்பு ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத போது இந்திய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு இரண்டு முறை சூர்யகுமார் யாதவிற்கு கிடைத்திருந்தது. இதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இருந்த சூர்யகுமார், நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை டிரா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தால் அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. முதலில் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் எடுத்த இந்த முடிவு, பெரிய அளவில் எதிர்ப்பை தான் சம்பாதித்திருந்தது.
ஆனால், தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ள சூழலில் அவர்கள் எடுத்த முடிவு சரி தான் என ரசிகர்களே தெரிவித்து விட்டனர். இதற்கு காரணம், 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் சூர்யகுமாரின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டில் அவர் திறனை வெளிய்ப்படுத்தியது தான்.
தொடர் நாயகன் விருதினை வென்றிருந்த சூர்யகுமார் யாதவ், இறுதி போட்டி வரையில் கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதுவும் கடைசி போட்டியில் 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே வேண்டுமென்றே சூழலிலும் அதனை கட்டுப்படுத்தியதுடன் ஒரு கேப்டனாக கடைசி ஓவரில் ரிஸ்க் எடுத்து இந்திய அணி வெற்றி பெறவும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
பொதுவாக, ஒரு ஓவருக்கு 6 ரன்கள் வேண்டுமென இருக்கும் போது தோனி, ரோஹித் போன்ற கேப்டன்களாக இருந்தாலும் கூட பகுதி நேர பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார். ஆனால், சூர்யகுமார் யாதவ் அந்த அளவுக்கு பந்து வீசியதில்லை என்ற போதிலும் அவர் சூழலை தனது தோளில் சுமந்து போட்டியை டை செய்ததுடன் சூப்பர் ஓவரில் ஃபோர் அடித்து வெற்றியை தேடிக் கொடுத்தார்.
இதனால், டி20 வடிவில் சிறந்த கேப்டனாக இந்திய அணிக்கு விளங்குவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி இருக்கையில் தான் ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகிய இரண்டு பேரை தொடர்ந்து சூர்யகுமார் செஞ்ச முக்கியமான விஷயம் ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம்.
பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரண்டு பேர் தான் இதற்கு முன் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அந்த இரண்டு பேரை தொடர்ந்து 3 வது டி20 இந்திய அணியின் கேப்டனாக ஒரு பகுதி நேர பவுலராக இருந்தும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.