ஸ்நாக்ஸ் தயாரிப்பில் நம்பர் ஒன்.. ஹால்டிராம் நிறுவனத்தை வாங்குகிறதா அமெரிக்க கம்பெனி?

இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம் நிறுவனத்தின் 51% பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம், நொய்டாவை தலைமையிடமாக…

haldiram

இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம் நிறுவனத்தின் 51% பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம், நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் நாக்பூர், புது டெல்லி, குர்கான், உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும் சொந்தமாக சில்லறை விற்பனை கடைகளையும் புனே, நாக்பூர், கொல்கத்தா, நொய்டா,  டெல்லி உள்பட சில நகரங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 80க்கும் மேற்பட்ட ஹால்டிராம் தயாரிப்புகள் உள்நாடுகளில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1937 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் முதன்முதலாக இந்த கடை தொடங்கப்பட்டது என்பதும் ஹால்டிராம்ஜி என்று அன்புடன் அழைக்கப்படும் கங்கா பிஷன் அகர்வால் என்பவர் தான் இந்த கடையை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகவும் நம்பகமான சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்ற இந்நிறுவனம் தற்போது அமெரிக்காவின் கைக்கு செல்ல போவதாக கூறப்படுகிறது. சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் 51% பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ரூ.40,000 கொடுத்து அமெரிக்க நிறுவனம் ஹால்டிராம் நிறுவனத்திற்கு கொடுக்க ஒப்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில வாரங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க நிறுவனம் வாங்கினாலும் இதே பெயர்தான் தொடர்ந்து இயங்கும் என்றும் கூறப்படுகிறது.