மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்

By Keerthana

Published:

தேனி: கேரளா மாநிலம் மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேMunnar, Theni, சுற்றுலா, மூணாறு ற்றிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக தேனி, அடிமாலி, மறையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து இன்றி முடங்கி உள்ளது.

ன்னிந்தியாவின் காஷ்மீர் என போற்றப்படும் மூணாறு கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலாதலம் ஆகும். இந்த நகரத்திற்கு செல்ல தமிழ்நாட்டில் இருந்து வருவோருக்கு தேனி, போடிமெட்டு வழியாக பிரதான சாலை இருக்கிறது. இதேபோல் கேரளாவின் கொச்சினில் இருந்து அடிமாலி வழியாக மூணாறு வர முடியும். இது கேரளாவில் இருந்து வருவோருக்கு பிரதான சாலையாகும்.

இவை இல்லாமல் மூணாறு வர திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து மறையூர் வழியாக ஒரு வழி இருக்கிறது. இந்த வழியை கோவை, ஈரோடு திருப்பூர் மாவட்டத்தினர் இந்த பாதையை அதிகம் விரும்புவார்கள்.ஆனால் இரவில் இந்த பாதையில் போக முடியாது. நள்ளிரவில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால், தேனி சாலை அல்லது கொச்சி வழியாக அடிமாலி வழியாகவே வர முடியும்.

மூணாறு நகரத்தை பொறுத்தவரை தேயிலை தோட்டங்கள் நிறைந்த சறுக்கும் வகையிலான செங்குத்தான நிலப்பரப்பு பகுதிகள் ஆகும்.இதன் காரணமாக கனமழை பெய்தால் திடீரென காட்டாற்று வெள்ளம் உருவாகி மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்படும்.

மூணாறில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது அடிக்கடி கனமழையும், நிலச்சரிவும் மூணாறில் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. வயநாட்டை தொடர்ந்து மூணாறிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மூணாறில் தேனி, வரும் சாலைளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், கொச்சி தனுஷ்கொடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதேபோல் கொச்சி சாலையிலும் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக மூணாறு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக மூணாறு-தேனி, மூணாறு-அடிமாலி, மூணாறு-மறையூர் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகள்முடங்கி உள்ளது. மூணாறு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.