சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்

By Keerthana

Published:

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ 400 குறைந்துள்ளது. இதை கேள்விப்பட்ட நகை பிரியர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை தாறுமாறாக ஏறிவந்த நிலையில், மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தார். இதன் காரணமாக ஜூலை 23ம் தேதி ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் குறைந்தது. இது தங்கம் விலை வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல் முறை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அன்று ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ,52 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆகியது. 24ம் தேதி அன்று கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ,6 ஆயிரத்து 490-க்கும், ஒரு சவரன் ரூ,51 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை வெறும் இரண்டு நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ,2 ஆயிரத்து 680-ம் குறைந்து இருந்தது. இதன் மூலம் தங்கம் விலை 110 நாட்களுக்கு பிறகு, ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ.52 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்நிலையில் தங்கம் விலை 25ம்தேதி அதிரடியாக குறைந்தது. கிராமிற்கு ரூ.60 குறைந்து ரூ.6430 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440 க்கும் விற்பனை செய்யப்பட்டது,

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, கடந்த சனிக்கிழமை எகிறியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 சனிக்கிழமை உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 51,720 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,465 க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மார்க்கெட்டுளுக்கு விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. ஒரு சவரன் ரூ 51,720 ஆக விற்பனை ஆகியது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ 6,465 ஆக இருந்தது. இந்த நிலையில்ஜூலை 29ம் தேதியான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50 குறைந்து ஒரு கிராம் ரூ 6415 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 51,320 க்கு விற்பனையாகிறது.

தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் குறைவதற்கான வாய்புகள் அதிகமாக உள்ளதாக வியாபாரிகள்தெரிவித்தனர். விலை குறைந்து கொண்டே வருவதால் ஒரு சவரன் விலை 50000க்கு கீழ் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. அதேநேரம் இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை மீண்டும் உயந்து பழைய நிலைக்கு வந்துவிடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தங்கம் வாங்கவும், தங்கத்தில் முதலீடு செய்யவும் இது சரியான நேரம் என்கிறார்கள்