தேசியக் கொடியோட செல்ஃபி போடுங்க.. நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

By John A

Published:

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக பட்ஜெட்டையும் தாக்கல் செய்து விட்டது. எனினும் கூட்டணித் தலைவர்கள் அவ்வப்போது பா.ஜ.க-வுக்கு நிபந்தனைகள் வைத்து தங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். இருப்பினும் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.

அவ்வப்போது நாட்டு மக்களிடம் நேரடியாகவும்,வானொலியில் மான்கீ பாத் நிகழ்ச்சி மூலமும் மக்களிடையே கலந்துரையாடி வருகிறார். மேலும் பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும் இயல்பாகப் பழகும் குணம் கொண்ட தலைவராக இருப்பதால் பிரதமர் மோடி மீது அளப்பரிய பிரியமும் கொண்டுள்ளனர் பொதுமக்கள். இதனால் நாளுக்கு நாள் அவரைச் சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ரேஷன் கார்டு + சிலிண்டர்+ மின் கட்டணம்+ தமிழ் புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் மாறப்போகும் விஷயங்கள்

கொரோனா காலகட்டங்களில் நாட்டு மக்களிடம் உரையாற்றி பின் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீட்டில் மணியடித்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி நாடெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இதன்பிறகு கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி செல்ஃபி எடுத்துப் பதிவிடுமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுக்க அதன்படி ஒவ்வொரு குடிமகனும் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

மேலும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், திறப்பு விழாவின் போது வீடுகளில் ராமருக்கு தீபம் ஏற்றி வழிபடச் சொன்ன போதும் அதன்படியே மக்கள் செய்தனர். இப்படி மக்களிடம் தேசப்பற்று, இறை பக்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் செயலாற்றும் பிரதமர் மோடி இந்த ஆண்டு சுதந்திரதினத்தன்று பொதுமக்களை வீடுகளில் தேசியக் கொடியேற்றி செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தேசப்பற்றை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15, 2024 அன்று கொண்டாடப்படும் வேளையில் பிரதமர் மோடி பொதுமக்களை மேற்கண்டவாறு கேட்டுக் கொண்டுள்ளார்.