சர்வதேச புலிகள் தினம், ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று கொண்டாடப்படுகிறது. இது அழிந்து வரும் புலி இனத்தை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். இந்த ஆண்டு சர்வதேச புலிகள் தினம், புலிகள் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் புலிகள் பாதுகாப்பின் அவசரத் தேவையையும் மக்களுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
சர்வதேச புலிகள் தினம் :வரலாறு
2010 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டின் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. TX2 என்னும் இலக்கை 2022 டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதி எடுக்கப்பட்டது. இந்த உச்சிமாநாட்டில் புலிகளின் எண்ணிக்கையில் அபாயகரமான சரிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து வருடாவருடம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச புலிகள் தினம் 2024: தீம்
இந்த ஆண்டு சர்வதேச புலிகள் தினத்தின் கருப்பொருள் புலிகள் செழிக்க பாதுகாப்பான, போதுமான, மற்றும் நிலையான சூழல்கள் இருப்பதை உறுதி செய்வதற்கான இன்றியமையாத தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சர்வதேச புலிகள் தினம்: முக்கியத்துவம்
புலிகள் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், வேட்டையாடுதல், வாழ்விட அழிவு மற்றும் மனித-வனவிலங்கு மோதல்கள் காரணமாக அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 100,000 புலிகள் இருந்த நிலையில், இன்று 4,000க்கும் குறைவான புலிகள் மட்டுமே காடுகளில் உள்ளன.
சர்வதேச புலிகள் தினம் இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசரத் தேவை குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது. இது இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வனவிலங்கு வழித்தடங்களை நிறுவுதல் போன்ற புலி பாதுகாப்பில் ஏற்பட்ட மேம்பாடுகளை கொண்டாடுகிறது.