இந்தியாவில் வேகமாக வளரும் வீடியோ மார்க்கெட்.. ஒரு லட்சம் கோடி வருமானமா?

  இந்தியாவில் மற்ற நாடுகளை விட மிக வேகமாக வீடியோ மார்க்கெட் வளர்ந்து வருவதாகவும் 2028 ஆம் ஆண்டு இந்தியாவில் வீடியோ மார்க்கெட் மூலம் கிடைக்கும் வருமானம் ஒரு லட்சம் கோடி இருக்கும் என்றும்…

video

 

இந்தியாவில் மற்ற நாடுகளை விட மிக வேகமாக வீடியோ மார்க்கெட் வளர்ந்து வருவதாகவும் 2028 ஆம் ஆண்டு இந்தியாவில் வீடியோ மார்க்கெட் மூலம் கிடைக்கும் வருமானம் ஒரு லட்சம் கோடி இருக்கும் என்றும் கணிப்பு ஒன்று கூறியுள்ளது.

வீடியோ மார்க்கெட் என்பது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் வீடியோக்கள், யூடியூப் சேனல்களில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் ஆகிவற்றை குறிப்பிடும் நிலையில் இந்தியாவில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொலைக்காட்சியில் ஒரு புதிய சினிமா அல்லது யூட்யூபில் ஒரு சினிமாவின் டிரைலர் அல்லது டீசர் வெளியானால் ஒரு சில நிமிடங்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் கிடைத்து வருவதாகவும் எனவே இந்தியாவில் வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பிரபல நிறுவனம் ஒன்று சர்வே எடுத்துள்ளது.

வீடியோ மூலம் கிடைக்கும் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு இந்தியாவில் வீடியோ மார்க்கெட் ஒரு லட்சம் கோடியை தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.  ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும், அம்பானியின் சில நிறுவனங்களும், சன் குழுமம் உள்பட ஒரு சில நிறுவனங்களும் வீடியோ மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கிறது என்றும் இந்தியாவில் வீடியோ மார்க்கெட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து கொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது புதுப்புது சீரியல் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்றும் குறிப்பாக அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய பொழுதுபோக்கு அம்சங்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த சர்வே தெரிவித்துள்ளது. அது மட்டும் இன்றி யூடிபிலும் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் அதன் மூலமும் ஏராளமானோர் வருமானம் பெற்று வருகின்றனர் என்றும் சிலர் இதனை முழு நேர தொழிலாகவும் வைத்து பார்த்து வருவதாகவும் சர்வை குறிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில் இந்தியாவின் வீடியோ மார்க்கெட் இன்னும் நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடியை தொடும் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.