கூகுளுக்கு ஆப்பு வைக்கும் Chat GPT.. அறிமுகம் செய்கிறது சியர்ச் ஜிபிடி  

ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேட வேண்டும் என்றால் உடனே கூகுள் சியர்ச் என்ஜின் சென்று நாம் ஒரு விஷயத்தை தேடுகிறோம். கூகுளும் நாம் தேடும் விஷயத்தை நமக்கு கண்டுபிடித்து நம் கண்முன் கொண்டு…

search gpt

ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேட வேண்டும் என்றால் உடனே கூகுள் சியர்ச் என்ஜின் சென்று நாம் ஒரு விஷயத்தை தேடுகிறோம். கூகுளும் நாம் தேடும் விஷயத்தை நமக்கு கண்டுபிடித்து நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதும் தெரிந்ததே.

உலகின் 90% பயனாளிகள் கூகுள் சியர்ச் என்ஜினை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மீதமுள்ளவர்கள் தான் மைக்ரோசாப்ட் பிங்க் உள்பட ஒரு சில சியர்ச் எஞ்சின்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ஏஐ டெக்னாலஜியால் கூகுளின் அஸ்திவாரத்திற்கே ஆட்டம் போட வைக்கும் ஓபன் ஏஐ நிறுவனம் தற்போது சியர்ச் ஜிபிடி  ஒரு புதிய சியர்ச் எஞ்சினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சியர்ச் எஞ்சின் பயனாளிகளுக்காக இந்த அம்சம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் ஏஐ டெக்னாலஜியுடன் இணைக்கும் வகையில் இந்த அம்சம் இருக்கும் என்பதால் ஒரு சில நொடிகளில் நாம் என்ன தேடினாலும் அதை மிகவும் துல்லியமாக கொண்டு வந்து சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

கூகுளின் அஸ்திவாரத்தையே ஆட்டம் போட வைக்கும் இந்த சியர்ச் ஜிபிடி  எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சியர்ச்ஜிபிடியில் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்ற பட்டியலில் நாம் தேடுவது என்ன என்பதை குறிப்பிட்டால் உடனே அது சம்பந்தமான தகவல்களை திரட்டி தருகிறது என்றும்  இப்போதைக்கு சோதனை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் வரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் சியர்ச் ஜிபிடி   என்பது ஒரு தொடக்க நிலையில் இருப்பதால் கூகுளுக்கு சவாலாக இருக்குமா? ஒரே இரவில் கூகுளை பின்னுக்கு தள்ளிவிடுமா?  என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.