சிறு வணிகர்களை குறிவைக்கும் பார்கோட் திருடர்கள்.. இப்படி கூட மோசடி நடக்குமா?

By Bala Siva

Published:

சிறு வணிகர்களை குறிவைத்து பார்கோட் மோசடிகள் நடந்து வருவதாகவும் எனவே பார்கோட்  வைத்திருக்கும் சிறு வணிகர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனை இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் சின்ன சின்ன கடைகளில் கூட பார்கோட் வைத்து அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

சின்ன சின்ன பெட்டிக்கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றில் கூட பார்கோட் வைத்திருக்கும் நிலையில் சிலர் தங்கள் தள்ளுவண்டிகளில் நிரந்தரமாகவே பார்கோட் வைத்துவிட்டு கடை மூடும் போது கூட அப்படியே விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

இது மாதிரியான சின்ன சின்ன கடைகளை குறிவைக்கும் பார்கோட் திருடர்கள் ஏற்கனவே உள்ள பார்கோட் மேல் புதிதாக தங்கள் வங்கி கணக்கில் பார்கோட் ஒட்டி வைத்து விட்டு சென்று விடுவதாகவும் இதனால் வாடிக்கையாளர்கள் பார்கோட் மூலம் பேமெண்ட் செலுத்தினால் வியாபாரியின் கணக்கிற்கு பணம் வராமல் மோசடி செய்தவரின் கணக்கிற்கு பணம் சென்றுவிடும் என்று காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஒவ்வொரு வாடிக்கையாளர் பணம் செலுத்தும் போது தங்கள் வங்கி கணக்கில் பணம் டெபிட் ஆகியுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பாக கடை அடைத்து விட்டு செல்லும் போது பார்கோட் அட்டையை கூடவே எடுத்து விட்டு செல்லும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.