சச்சின், கோலி வரிசையில் ரோஹித் பிடிக்கப் போகும் இடம்.. அப்போ இலங்கை சீரிஸ்ல சம்பவம் கன்ஃபார்ம்னு சொல்லுங்க..

By Ajith V

Published:

பல ஆண்டுகளுக்கு முன்பாக கிரிக்கெட் அரங்கில் எந்த சாதனைகளை எடுத்துக் கொண்டாலும் சச்சின் டெண்டுல்கர், ஜாக்கஸ் காலீஸ், பிரைன் லாரா, சேவாக், மேத்யூ ஹைடன் உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் பெயர்கள் இருக்கும். இதில் பல வெளிநாட்டு வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் சச்சினுக்கு நிகராக பல சாதனைகளை எந்த வீரர்களாலும் படைக்காமல் முடியாமல் போனது.

அப்படி ஒரு காலத்தில் ஒரு இந்திய வீரர் கிரிக்கெட் உலகை கட்டி ஆண்டு வந்த நிலையில் தற்போதும் அப்படி ஒரு இடத்தை ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களின் பேட்டிங் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் இரு துருவங்களாக கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் இருக்கும் நிலையில் சச்சினின் பல முக்கிய சாதனைகளை ஒரு பக்கம் விராட் கோலி முறியடித்து வருகிறார்.

சச்சின் சாதனையை இனிமேல் நெருங்க முடியுமா என ஒரு காலத்தில் பலரும் குறிப்பிட, அதனை மெல்ல மெல்ல நெருங்கி வரும் விராட் கோலி நிச்சயம் சச்சினை போலவே மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சரித்திரத்தில் இடம் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா, பல முக்கியமான சாதனைகளை படைத்திருந்தாலும் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களில் தான் அவர் ஸ்பெஷலிஸ்ட். சர்வதேச போட்டியில் நிறைய சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயில் உள்ளிட்ட பல அதிரடி வீரர்களுக்கும் சவாலாக இருந்த ரோஹித் ஷர்மா, இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிக முக்கியமான சாதனை ஒன்றை படைக்கப்போவது பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரையில் அதிக ஃபோர்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். இவர் 2016 ஃபோர்களை அடித்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் விராட் கோலி 1294 ஃபோர்களுடன் உள்ளார். இவர்களை தாண்டி சேவாக் 1132 ஃபோர்களும், சவுரவ் கங்குலி 1122 ஃபோர்களையும் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளனர்.

அந்த வரிசையில் ஐந்தாவது இந்திய வீரராக ரோஹித் ஷர்மா உள்ளார். இவர் இதுவரை 994 ஃபோர்களை பறக்க விட்டுள்ளார். இதனால், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இன்னும் ஆறு ஃபோர்கள் அடித்தால் ஆயிரம் ஃபோர்களை அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெறலாம். ஆறு ஃபோர்கள் என்பதால் நிச்சயம் ரோஹித் ஷர்மா அதனை முதல் போட்டியிலேயே முறியடித்து முக்கியமான இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.