37 மாடி கட்டிடம்.. எறும்பு போல் தெரிந்த கார்கள்.. உச்சியில் நடந்த விபரீத விளையாட்டு..

ஜெர்மனி : வெளிநாடுகளில் சாகச விளையாட்டுக்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. அந்தரத்தில் தொங்குவது. உச்சி மலையில் ஏறுவது. பைக், கார் சாகசங்களில் ஈடுபடுவது போன்ற பல விபரீத சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு பேஷனாகி விட்டது. மேலும்…

Germany

ஜெர்மனி : வெளிநாடுகளில் சாகச விளையாட்டுக்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. அந்தரத்தில் தொங்குவது. உச்சி மலையில் ஏறுவது. பைக், கார் சாகசங்களில் ஈடுபடுவது போன்ற பல விபரீத சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு பேஷனாகி விட்டது. மேலும் இதனை வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். இருப்பினும் இந்த லைக்குகள் ஒன்றுக்கும் உதவாது என்பதை இணையவாசிகள் கருத்தில் கொள்ளாமல் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ரீல்ஸ் எடுக்கும் போது விபத்து ஏற்பட்டு தங்கள் உயிரை மாய்க்கின்றனர்.

ஆனாலும் இந்த ரீல்ஸ் மோகங்களும், சாகச விளையாட்டுகளும் கொஞ்சமும் குறையவில்லை. அப்படி ஓர் சாகச நிகழ்ச்சிதான் ஜெர்மனியில் நடந்திருக்கிறது. ஐரோப்பிய நாடான ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் உள்ள ஓர் நட்சத்திர ஹோட்டல் 37 மாடி உயரம் கொண்டது. இந்த ஹோட்டலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இப்படி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக அந்த ஹோட்டல் வித்தியாசமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்சினிமாவின் காமெடிப் படத்துக்கு வந்த சோதனை.. தடங்கல்களைத் தாண்டி மாபெரும் வெற்றி பெற்ற நகைச்சுவைக் காவியம்

37 -வது மாடியின் மேல் தளத்தில் ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊஞ்சலில் ஆடும் போது ஹோட்டலைத் தாண்டி அந்தரத்தில் ஆடுவதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. 120 மீட்டர் உயரம் கொண்ட இந்த மாடியின் உச்சியிலிருந்து நிபுணர்களின் முறையான மேற்பார்வை, தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை கொண்டு சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடுகின்றனர். அவ்வாறு ஆடும் போது கீழே உள்ள அனைத்தும் எறும்பு போல் சிறிதாக ஊர்வது போல் இருக்கிறது என சாகச ஊஞ்சலில் ஆடியவர்கள் தெரிவித்தனர்.