தமிழ்சினிமாவின் காமெடிப் படத்துக்கு வந்த சோதனை.. தடங்கல்களைத் தாண்டி மாபெரும் வெற்றி பெற்ற நகைச்சுவைக் காவியம்

By John A

Published:

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குநர் என்று அழைக்கப்படுவர் இயக்குநர் ஸ்ரீ தர். ஏராளமான புதுமுகங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். இவரின் இயக்கத்தில் 1964-ல் வெளியான படம்தான் தான் காதலிக்க நேரமில்லை. பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் ஹீரோவாக அறிமுகமான முதல் படம். இப்படத்தின் காமெடிக் காட்சிகள் இன்றுவரை டிரெண்டிங்கில் இருப்பவை. ஒரு முழுநீள காமெடிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்படம் தகுந்த உதாரணம்.

குறிப்பாக நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் காட்சிக்கு தியேட்டரில் சிரிக்காதவர்களே கிடையாது. இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தின் தொடக்கத்தில் பூஜை போடும் போது வரிசையாக அபச சகுணங்கள் நடைபெற்றதாம். பெரும்பாலும் எதிலும் நல்ல சகுணம் பார்க்கும் இயக்குநர் ஸ்ரீதர் இந்தப் படத்தின் பூஜைக்கு அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார்.

அங்குள்ள கடவுள் படங்களை எடுத்துவைத்து பூஜை போட ஒரு சிறுவன் கேமராவினை இயக்கி ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும் எண்ணி ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மகன் ஜெயனனை கேமராவினை ஆன் பண்ணச் சொல்ல, அப்போது அக்குழந்தை அடம்பிடித்து அழ ஆரம்பித்திருக்கிறது.

குருநாதரையே இயக்கிய இயக்குனர்கள்…. கெத்து காட்டிய பாக்கியராஜின் தாவணிக்கனவுகள்

இது என்னடா சோதனை என்றவாறு வேறு வழியின்றி வின்சென்ட் தன் குழந்தையின் கைளைப் பிடித்து கேமராவினை இயக்கி வைத்திருக்கிறார். இதற்கு அடுத்ததாக கற்பூரம் ஏற்றிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைபட்டது. உடனே இப்படத்தின் கதாசிரியர் சித்ராலயா கோபு முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார். இது ஸ்ரீதருக்குக் கேட்க உடனே அவர் பாடல் பதிவின் போது மீண்டும் ஒரு பூஜையைப் போட்டு விடலாம் என்று அவரைச் சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இதனையடுத்து பாடல் பதிவின் போது பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் அவர்கள் அழைத்திருந்த ஐயர் வரவில்லை. இதிலும் இப்படி ஒரு தர்மசங்கடமா என்று நொந்தவாறே எம்.எஸ்.வி. இசைக்குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை அழைத்து பூஜையை நடத்தியிருக்கிறார்கள்.

இதுபோதாது என்று முதல் காட்சியாக அனுபவம் புதுமை பாடல் காட்சியைப் படமாக்கும் போது கேமரா ஓடத் தொடங்கியதும் பெல்ட் அறுந்து ஷுட்டிங் தடைபட்டிருக்கிறது. இப்படி பல சோதனைகளைத் தாண்டி எடுக்கப்பட்ட காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவின் எவர்கிரீன் கிளாசிக் காமெடிப் படமாக உருவானது என்பது வரலாறு..