கவிஞர் கண்ணதாசன் எண்ணற்ற காலத்தால் அழியாத பல காவியப் பாடல்களைப் படைத்திருந்தாலும் ஒரு சில பாடல்களில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியிருப்பார். அதனை சற்று ஆழ்ந்தால் கேட்டால் இந்தப் பாடலில் இப்படி ஓர் கவித்துவம் இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட வைக்கும்.
மேலும் தத்துவப் பாடல்களில் கவிஞர் எப்படி கொடிகட்டிப் பறந்தாரோ அதேபோல் பக்திப் பாடல்களிலும் தனது கவிப்புலமையை வெளிப்படுத்தியிருப்பார். இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் பகவான் விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணனின் மேல் இயல்பாக பெண்களே காதல்வயப்படுவர். ஆனால் இங்கே அப்படியே நிலை மாறி கவிஞர் கண்ணன் மேல் காதல் கொண்டு ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் கிளாசிக் பாடல்களைத் தந்திருக்கிறார்.
கண்ணனைத் தூங்க வைப்பதற்காக அமைந்த முதல் பக்திப் பாடல்
ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
என்றும்,
மகனுக்குத் தந்தை பாடும் தாலாட்டுப் பாடல் என்றால்
சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
என்றும்,
கதாநாயகிக்கு கதாநாயகனைப் பார்த்து காதல் வந்த சூழலில்
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
என்றும்,
காதலன், காதலி இருவருக்கும் வரும் கனவுப் பாடலில்
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதங்கே என்றும்,
அதேபோல் கண்ணனுக்குப் பதிலாக ராமனைப் போட்டு
அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பாத்திருந்தாள்…
பிரகாஷ்ராஜ் சொன்ன 15கிலோ சதை, 10 கிலோ எலும்பு இல்லை… எஸ்.ஜே.சூர்யா சொன்ன தனுஷ் சீக்ரெட்
மேலும் திருமணம் நிச்சயித்தவுடன் தோழிகள் நாயகியைப் பார்த்துப் பாடும் பாடலான
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை என்றும்,
அதேபோல் திருமண வைபவத்தில் இணையும் போது
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளோ தோழி
வைதேகி காத்திருந்தாளோ,
மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தோழி
என்றும்,
கவினுக்கு ஜோடியான நயன்தாரா.. வைரலாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
முதலிரவில் கணவன் மனைவி காட்சியில்
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூ பாவை தன்னை
என்றும்,
மேலும் நாயகி கோபத்தில் பாடுவதாக அமைந்த
கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடலும்
ஏமாற்றத்தில் அமைந்த பாடலாக
ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா
ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரோ கண்ணா
தன்னம்பிக்கை கொடுக்கும் பாடலாக
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
வஞ்சத்தில் ஏமாந்த போது
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா
என்று அவரைத் திட்டியும்,
மொத்தத்தில் ராமரின் அத்தனை திருவுருவங்களையும் சேர்த்து,
ராமன் எத்தனை ராமனடி என்ற பாடலில் 12 ராமர் அவதாரங்களையும் குறிப்பிட்டிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
இப்படி தன் பாடல்களில் பல முறை கண்ணன் என்ற பெயரைத் தாங்கி பாடல்களை இயற்றியிருக்கிறார் இந்த 13-ம் ஆழ்வார்.