ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…

By John A

Published:

சென்னை : தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் புழகத்தில் உள்ளன. இக்கார்டு அரசின் நலத்திட்டங்களுக்கு முக்கிய அடையாளச் சான்றாகவும், மானிய விலையில் பொருட்கள் பெறவும், முகவரி ஆதாரமாகவும் விளங்குகிறது.

புத்தக வடிவில் இருந்த ரேஷன் கார்டுகள் மாற்றப்பட்டு தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. முறைகேடுகளைத் தவிர்க்கவும், பயனாளர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் சேரவும், காகித பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடும்ப அட்டையில் உள்ளவரின் பெயர் மூலம் ஆதார், கைரேகை சரிபார்ப்பிற்கு பின் பொருட்கள் வழங்கப்படுகின்றன.நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2.24 ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதின் மூலம் மத்திய, மாநில பங்கீட்டின்படி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் ஆய்வு செய்து புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டு அதன்படி புதிய கார்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

தொல். திருமாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பீங்களா? கொளுத்திப் போட்ட தமிழிசை..

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்தவுடன் அரசின் நலத்திட்டங்கள், புதிய கார்டுகள் வழங்கும் பணி ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர் தங்களுக்கு எப்போது ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது தமிழக அரசு குட்நியூஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, புதிதாக தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, கள ஆய்வுக்குப் பின்னர் தற்போது மீண்டும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. இதனால் விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.