மைக்ரோசாப்டை அடுத்து யூடியூபில் பிரச்சனை.. அப்லோட் செய்த வீடியோக்கள் மாயம்..!

கடந்த சில நாட்களுக்கு முன் மைக்ரோசாப்ட் பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் வங்கி சேவைகள், விமான சேவைகள், பங்கு சந்தைகள் முடங்கிய நிலையில் தற்போது யூடியூபில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அப்லோடு செய்த வீடியோக்கள்…

Youtube

கடந்த சில நாட்களுக்கு முன் மைக்ரோசாப்ட் பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் வங்கி சேவைகள், விமான சேவைகள், பங்கு சந்தைகள் முடங்கிய நிலையில் தற்போது யூடியூபில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அப்லோடு செய்த வீடியோக்கள் மாயமாகி விடுவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்த அளவுக்கு டெக்னாலஜி உயர்ந்து கொண்டே செல்கிறதோ, அதே அளவுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது என்பதும் அந்த வகையில் மைக்ரோசாப்ட் ஏற்படுத்திய குழப்பங்கள் இன்னும் நீங்காத நிலையில் தற்போது யூடியூபில் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் உலகம் முழுவதும் பல யூடியூபர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

யூடியூப் பயனாளிகள் பலர் தங்களது சமூக வலைதள கணக்கில் பிரச்சனையை சந்தித்ததாக பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக அப்லோட் செய்த வீடியோக்கள் காணவில்லை என்றும் யூடியூபில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பல யூடியூபர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்சனை அனைத்து நபர்களுக்கும் இல்லை என்றும் சிலருக்கு மட்டும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்லோட் செய்த வீடியோ பப்ளிஷ் ஆகவில்லை என்றும் 24 மணி நேரத்தில் உங்களது வீடியோ பப்ளிஷ் ஆகும் என்று மெசேஜ் வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தான் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக பல சமூக வலைதளத்தை பதிவு செய்து வரும் நிலையில் இது குறித்து யூடியூப் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் மற்றும் யூடியூப் என அடுத்தடுத்து பிரச்சனை ஏற்பட்டு வருவது பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.