ஹெட்போனில் பாட்டு கேட்டு கொண்டே ரயில் தண்டவாளத்தில் நடந்த சிறுவர்கள்.. பரிதாப முடிவு..!

காதில் ஹெட்போன் போட்டு இசையை ரசித்து கேட்டு கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவர்களுக்கு பரிதாபமாக முடிவு ஏற்பட்டுள்ள சம்பவம்  உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…

track

காதில் ஹெட்போன் போட்டு இசையை ரசித்து கேட்டு கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற சிறுவர்களுக்கு பரிதாபமாக முடிவு ஏற்பட்டுள்ள சம்பவம்  உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மற்றும் ஜாகீர் அகமது ஆகிய இருவரும் பக்கத்து வீடுகளில் குடி இருக்கும் நெருங்கிய நண்பர்கள். 15 மற்றும் 16 வயதாகும் இந்த இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ரயில்வே தண்டவாளத்தில் காதில் ஹெட்போன் வைத்துக் கொண்டு பாடல்களை கேட்டுக்கொண்டே ஜாலியாக சென்றனர்.

அப்போது பின்னால் ரயில் வருவதை அவர்கள் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததால் அறியவில்லை. இந்த நிலையில் டிரைவர் சுதாரித்தும் ரயிலை குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்த முடியாததால் இரண்டு சிறுவர்கள் மீது ரயில் மோதியதை அடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரது  உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் தண்டவாளத்தில் நடப்பது என்பது ஆபத்தானது என்றும் குறிப்பாக ஹெட் போப் அணிந்து கொண்டு நடப்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் ரயில்வே துறை பலமுறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் இளைஞர்கள் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே ரயில் தண்டவாளத்தில் நடந்த நிலையில் அவர்கள் இருவரும் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.