100% மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு.. அமெரிக்காவே ஆடிப்போனது.. கர்நாடகா எம்மாத்திரம்..!

By Bala Siva

Published:

100% மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்று கர்நாடக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் மசோதா கொண்டு வந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை என்று கூறி வெளிநாட்டில் இருந்து பணி செய்ய வரும் நபர்களுக்கு விசா மறுத்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருக்கும்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று சொன்ன பின்னர்தான் பணிந்தது.

அதேபோல் கர்நாடக மாநிலத்தில் 100% கர்நாடக மாநில மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெங்களூரை விட்டு நாங்கள் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்த பின்னர் தான் கர்நாடக அரசு பணிந்து அந்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது.

மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வேலை என்பது ஒரு காலத்தில் வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். உலகமே ஒரு கூடையின் கீழ் வந்து விட்ட நிலையில் இப்போதும் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டும் வேலை என்று கூறி வருவது சாத்தியம் இல்லை. உலகில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற நிலை ஏற்கனவே ஏற்பட்டு விட்டது என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் முன்னணி தொழிலதிபர்கள் கூறி வருகின்றனர்.