இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கேப்டன் விஜயகாந்தைப் பற்றி சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவற்றில் ஒன்று புலன் விசாரணை மற்றொன்று கேப்டன் பிரபாகரன். இவற்றில் கேப்டன் பிரபாகரன் படத்தின் போது அவர் பட்ட கஷ்டங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
நான் ஒரு தனிப்பட்ட இயக்குனர். எனக்கு குவான்டிட்டி முக்கியமல்ல. குவாலிட்டி தான் முக்கியம். கேப்டன் பிரபாகரன் படத்தை முதலில் நான் எடுத்தது ஃபுல்லா நைட் தான் சூட்டிங். 100 நைட் சூட் பண்ணியிருக்கேன். விஜயகாந்;த் சார் கால்ஷீட் கொடுத்ததே நைட் சூட்டிங்குக்குத் தான்.
என்னோட டோன் வந்து பிளாக். அதனால நைட் தான் சூட். இது புல்லா க்ரீன் டோன் படம். ஷோலே மாதிரி படம் எடுக்கணும்னு நினைச்சேன். அப்போ ஆட்டோ சங்கர் அதுல கிளிக் ஆச்சு. அது உண்மைக் கதை. அதனால நான் வீரப்பனைப் பத்தி எடுக்கலாம்னு நினைச்சேன். ஃபுல்லா கிரீன் டோன்.
அதுக்காக நான் 6 மாசம் பிரயாணம் பண்ணியிருக்கேன். ஜிப்சி ஜீப் கொடுத்துட்டாங்க. நான், அசிஸ்டண்ட், போட்டோகிராபர், டிரைவர் போனோம். ஏறக்குறைய 40 ஆயிரம் கிலோ மீட்டர் சுத்தியிருக்கோம். நான் சுத்தாத பாரஸ்டே கிடையாது. சவுத் இந்தியாவுல எல்லா பாரஸ்டும் எனக்குத் தெரியும்.
30 கிலோ மீட்டர் தமிழ்நாட்டுப் பார்டர்ல மலை ஏறி அந்தப் பக்கமா இறங்கி இருக்கோம். நடந்து போயிருக்கோம். ஒரு நாள் நைட் ஃபுல்லா மலையிலேயே கழிச்சிருக்கோம்.
அதுக்குப் பல்வேறு விதமான சித்ரவதைகளை எல்லாம் அனுபவிச்சிருக்கோம். புலியை நேரா பார்த்திருக்கோம். யானை துரத்துதுன்னு பயந்து ஓடியிருக்கோம். நாங்க ஒரு தடவை போகும்போது டர்னிங்க்ல வண்டி ஏறி அப்படியே நிக்குது. அப்படியே டிரைவர் நிக்கிறான். ஒரு புலி ஏறி பேனட் மேல காலைத் தூக்கி வச்சிக்கிட்டு நிக்குது.
6 அடி, 8 அடி இருக்கும். அப்போ வாட்சர் சொல்றான். எந்தவிதமான மூவ்மென்ட்டும் பண்ணக்கூடாது. வண்டியை ஆப் பண்ணக்கூடாது. அப்படியே வந்து பரண்டுது. எங்களைப் பார்க்குது. அது மாலை 6 மணி இருக்கும். அப்புறம் அப்படியே இறங்கிப் போகுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.