வேட்டி கட்டிய விவசாயியை தடுத்து நிறுத்திய மால் நிர்வாகம்.. பெங்களூரில் திடீர் போராட்டம்..!

By Bala Siva

Published:

பெங்களூர் மால் ஒன்றின் காவலாளி வேட்டி கட்டிய விவசாயியை உள்ளே விட மறுத்ததை அடுத்து எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று திடீரென போராட்டம் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரப்பா என்ற விவசாயி தனது மகன் பெங்களூரில் வேலை செய்து வந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று திரைப்பட பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவரது மகன் தனது தந்தையை அழைத்துச் சென்று இருந்தார்.

அப்போது மால் காவலாளி வேட்டி கட்டியவரை உள்ள விட முடியாது என தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தான் ஒரு விவசாயி என்றும் பல ஆண்டுகளாக வேட்டி சட்டை மட்டுமே அணிந்து வருவதாகவும் கூறிய நிலையில் காவலாளி வேட்டி அணிந்தால் மாலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் போய் பேண்ட் அணிந்து வாருங்கள் என்றும் கூறினார். என் அப்பாவுக்கு பேண்ட் அணியும் பழக்கம் இல்லை, வேட்டி தான் எப்போதும் அணிவார் என்று நாகராஜ் கூறியும் காவலாளி உள்ளே விடவில்லை.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் மால் நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வந்தன. இதற்கு மால் நிர்வாகம் ஆண் பெண் இருபாலருக்குமே சில உடைகள் அணிந்து மாலுக்குள் வர தடை என்றும் கூறியதை அடுத்து இந்த விவகாரம் பெரும் பிரச்சனைக்கு உள்ளானது.

இந்த நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தற்போது விவசாய சங்க தலைவர் கடும் கோபம் அடைந்து மால் முன் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து மால் நிர்வாகம் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளரை அனுப்பி நாகராஜ் மற்றும் அவருடைய தந்தையிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது நடக்காது என்று உறுதி கூறியதாகவும் தெரிகிறது. இருப்பினும் விவசாயிகள் இந்த விவகாரத்தை லேசில் விடுவதில்லை என்றும் போராட்டத்தை தொடர இருப்பதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.