பள்ளி மாணவ மாணவிகளுக்கு பென்சில் என்றால் உடனே ஞாபகம் வருவது கேம்லின் பென்சில் தான் என்பதும் பல ஆண்டுகளாக தரமான பென்சில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பது தெரிந்தது. இந்த நிலையில் கேம்லின் பென்சில் நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் என்பவர் காலமானார். அவருக்கு வயது 85.
சுபாஷ் தண்டேகர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் தண்டேகர் மறைவுக்கு தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1931 ஆம் ஆண்டு தனது சகோதரருடன் இணைந்து சுபாஷ் தண்டேகர், கேம்லின் என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் ஆரம்பத்தில் பேனா மைகள் மட்டுமே தயாரித்து வந்த இந்த நிறுவனம் படிப்படியாக பல பொருள்களை தயாரிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை தயாரிப்பதில் கேம்லின் நிறுவனம் புகழ் பெற்றதாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில் ஜப்பான் நிறுவனம் கேம்ளின் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட சதவீத பங்குகளை ரூ.366 கோடிக்கு வாங்கியது என்பதும் அதன் பிறகு கோகுயோ கேம்லின் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிறுவனத்தின் தலைவராக சுபாஷ் தண்டேகர் தான் கடைசிவரை பதவியேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.