மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, கருப்பு கவுனி போன்ற சிறுதானிய அரிசி வகைகளின் மகத்துவம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா…?

By Meena

Published:

சிறுதானியம் என்பது வரகு, சாமை, சோளம் போன்ற உருவில் சிறியதாக இருக்கும் தானிய வகைகளை குறிக்கும். இந்த சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது. மேலும் இதைப் பற்றி சங்க இலக்கியங்களும் கூறுகிறது.

சிறுதானிய வகைகள் என்பது வரகு, சாமை, சோளம், தினை, குதிரைவாலி, பனிவரகு, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கம்பு, பார்லி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவை ஆகும். இந்த சிறுதானியங்களை நம் உணவில் அன்றாடம் எடுத்துக்கொண்டால் நம் உடம்பிற்கு நன்மை பயக்கும்.

ஊட்டச்சத்து மிகுந்த இந்த சிறுதானிய அரிசி வகைகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தினமும் ஒரு வேளையாவது இந்த சிறுதானிய அரிசி வகைகளை கொண்டு கிச்சடி, பாயாசம், கஞ்சி, சாதம் என எப்படி வேண்டுமானாலும் நம் விருப்பப்படி செய்து சாப்பிடலாம்.

சாதாரண புழுங்கல் அரிசி சாதத்தை விட இந்த சிறுதானிய அரிசியில் புரதச் சத்து, நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து ஆகியவைகள் உள்ளது. மேலும் இந்த அரிசியில் தயாரிக்கும் பதார்த்தங்களை உட்கொள்ளுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்பு வலுப்பெறும், பார்வை தெளிவடையும், ஆண்மை அதிகரிக்கும், உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும். கேன்சர் செல்கள் வராமல் தடுக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சிறுதானிய அரிசி வகைகளில் செய்த உணவுகள் மிகவும் நல்லது.

தற்போதைய காலகட்டத்தில் எல்லா பக்கமும் பாஸ்ட் புட் மயமாக உள்ளது. அது எவ்வளவு தீங்கானது என்று மக்கள் உணர ஆரம்பித்து, விழிப்புணர்வு அடைந்து , உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். மேலும் இந்த சிறுதானிய வகைகள் உங்கள் உடல் நலனை மேம்படுத்தும் என்ற நோக்கில் நீங்களும் இந்த அற்புதமான உணவினை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றுங்கள்.