விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அல்காரிதம்.. மாரடைப்பு வருவதை ஒரு மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்..!

  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு முதலுதவி செய்வதற்கு முன்பு பலர் உயிரிழந்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் நீண்ட முயற்சிக்கு பிறகு மாரடைப்பு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிக்கும் வகையில் அல்காரிதம் கண்டுபிடித்து…

heart attack

 

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு முதலுதவி செய்வதற்கு முன்பு பலர் உயிரிழந்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் நீண்ட முயற்சிக்கு பிறகு மாரடைப்பு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிக்கும் வகையில் அல்காரிதம் கண்டுபிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய நிமிடம் வரை நன்றாக இருக்கும் மனிதர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து விடுகின்றனர் என்பதும் இதில் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. இதயத்துடிப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்ய ஸ்மார்ட் வாட்ச் உதவி செய்தாலும் மாரடைப்பு வருவதை அது கண்டுபிடிப்பதில்லை.

இந்த நிலையில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து ஆயிரக்கணக்கான மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளிடம் ஆய்வு செய்து தற்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய அல்காரிதம் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த அல்காரிதத்துடன் கூடிய டிவைஸை நாம் அணிந்து கொண்டால் இதயத்துடிப்புகளை அந்த டிவைஸ் கண்காணித்து விடும் என்றும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே மாரடைப்பு ஏற்படும் அறிகுறி இருப்பதை கண்டுபிடித்து அலர்ட் செய்வதால்  சுதாரித்து முதலுதவி எடுத்துக் கொண்டால் மாரடைப்பை தடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டிவைஸ் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.